Velmurugan s | Published: Mar 26, 2025, 2:00 PM IST
இயக்குனர் இமயம் பாரதிராஜாவின் மகன் மனோஜ் திடீரென உயிரிழந்திருக்கும் செய்தி ஒட்டுமொத்த சினிமாவையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது. சேத்துப்பட்டில் உள்ள அவரது வீட்டில் ஓய்வு எடுத்து வந்த நிலையில் நேற்று மாலை 6 மணி அளவில் திடீரென மாரடைப்பு ஏற்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். இருப்பினும், அங்கு அவரை பரிசோதனை செய்த மருத்துவர்கள், அவர் ஏற்கனவே மரணம் அடைந்துவிட்டதாகத் தெரிவித்தனர். இவரது மரணம் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மரணம் அடைந்த மனோஜ் உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது. நடிகர், நடிகைகள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.