தனுஷ், யுவன் குரலில்... நானே வருவேன் படத்தின் ‘ரெண்டு ராஜா’ பாடல் - வைரலாகும் வீடியோ இதோ

Sep 24, 2022, 11:00 AM IST

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் நானே வருவேன். கலைப்புலி எஸ் தாணு தயாரித்துள்ள இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்து உள்ளார். யுவனின் இசையில் ஏற்கனவே வீரா சூரா என்கிற பாடல் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது அப்படத்தின் இரண்டாவது பாடலான ரெண்டு ராஜா என்கிற பாடலை வெளியிட்டுள்ளனர். இப்பாடலை தனுஷும், யுவன் சங்கர் ராஜாவும் இணைந்து பாடி உள்ளனர். இப்பாடல் வரிகளை தனுஷ் எழுதி உள்ளார். வருகிற செப்டம்பர் 29-ந் தேதி இப்படம் திரையரங்குகளில் ரிலீசாக உள்ளது.