தனுஷின் இனிமையான குரலில் வெளியானது வெற்றிமாறனின் ‘விடுதலை’ பட பர்ஸ்ட் சிங்கிள்

Published : Feb 08, 2023, 11:49 AM IST

விடுதலை படத்திற்காக இளையராஜா இசையில் தனுஷ் முதன்முறையாக பாடி உள்ள ‘ஒன்னோட நடந்தா’ என்கிற பாடல் ரிலீஸ் செய்யப்பட்டு உள்ளது.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை படத்தில் விஜய்சேதுபதியும், சூரியும் நாயகர்களாக நடித்துள்ளனர். இப்படத்தின் ஷூட்டிங் முடிந்து பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகிறது. இன்று விடுதலை படத்தின் முதல் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது. ‘ஒன்னோட நடந்தா’ என்கிற இப்பாடலுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இப்பாடலை நடிகர் தனுஷ் தான் பாடி இருக்கிறார்.

இளையராஜா இசையில் தனுஷ் பாடும் முதல் பாடல் இதுவாகும். இதற்காக இளையராஜாவிடம் பிரத்யேக பயிற்சி எடுத்து இப்பாடலை பாடி உள்ளார் தனுஷ். தற்போது ‘ஒன்னோட நடந்தா’ பாடலின் லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில் தனுஷ் பாடல் பாடியபோது எடுத்த காட்சிகளும் இடம்பெற்று உள்ளன. இப்பாடலை தனுஷுடன் சேர்ந்து பாடகி அனன்யா பட்டும் பாடி இருக்கிறார்.

விடுதலை படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளார் வெற்றிமாறன். அதன்படி இப்படத்தின் முதல்பாகம் வருகிற மார்ச் மாத இறுதியில் வெளியிடப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் தமிழக வெளியீட்டு உரிமையை உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் நிறுவனம் தான் கைப்பற்றி உள்ளது.

03:29சேஃப் தாமுவின் மறைவு : மேடையில் கதறி அழுத விஜய் டிவி புகழ் !
02:00செஃப் தாமுவின் இறப்பு செய்தி கேட்டு கலங்கி நின்ற வெங்கடேஷ் பட்! சோகத்தில் CWC குடும்பம்
05:03சக்கரமல்லூரில் இசையமைப்பாளர் தேவாவிற்குப் பாடகர்கள் இசை அஞ்சலி: உருக்கமான நிகழ்வு!
04:01மெயின்புரி சீத்லா மாதா கோவிலில் பாலிவுட் நடிகை சோனல் சௌஹான் சிறப்பு வழிபாடு!
02:42ஜாம்நகர் ரிலையன்ஸ் நவ்ராத்திரி திருவிழா: நடிகை ராஷ்மிகா மந்தனா வருகை – நேரடி காட்சிகள்!
09:23இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நடிகர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் நேரில் அஞ்சலி !
04:04இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய நடிகர் ரஜினிகாந்த் !
03:39இசையமைப்பாளர் தேவாவின் மறைவு: நேரில் அஞ்சலி செலுத்திய முதல்வர் விஜய் !
03:13திரையுலகில் இயக்குநராக அறிமுகம்: "சிகமா" படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் ஜேசன் சஞ்சய் பேச்சு!
01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
Read more