Cool Suresh : பத்து தல FDFS பார்க்க ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ

Cool Suresh : பத்து தல FDFS பார்க்க ஹெலிகாப்டருடன் வந்த கூல் சுரேஷ் - வைரலாகும் வீடியோ

Published : Mar 30, 2023, 08:28 AM IST

சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி இருக்கும் நிலையில், அப்படத்தின் முதல் காட்சியை பார்க்க நடிகரும் சிம்புவின் ரசிகருமான கூல் சுரேஷ் ஹெலிகாப்டருடன் வந்துள்ளார்.

ஒபிலி என் கிருஷ்ணா இயக்கத்தில் சிம்பு நடித்துள்ள பத்து தல திரைப்படம் இன்று ரிலீஸ் ஆகி உள்ளது. ஸ்டூடியோ கிரீன் ஞானவேல் ராஜா தயாரித்துள்ள இப்படத்தின் முதல் காட்சி இன்று காலை 8 மணிக்கு திரையிடப்பட்டது. இதற்காக தியேட்டர் முன் பட்டாசு வெடித்து, மேள தாளங்கள் முழங்க ஆடிப்பாடியும் சிம்பு ரசிகர்கள் கொண்டாடினர்.

குறிப்பாக சிம்புவின் தீவிர ரசிகரான நடிகர் கூல் சுரேஷ், பத்து தல படத்தின் முதல் ஷோ பார்க்க ஹெலிகாப்டரில் வருவேன் என கூறி இருந்தார். வீட்டை விற்றாவது ஹெலிகாப்டரில் வருவேன் என ஆவேசமாக பேட்டியும் அளித்திருந்தார். ஆனால் இன்று கையில் பொம்மை ஹெலிகாப்டர் ஒன்றை தூக்கிக்கொண்டு பத்து தல FDFS பார்க்க வந்துள்ளார் கூல் சுரேஷ்.

சென்னையில் உள்ள ரோகினி தியேட்டருக்குள் பொம்மை ஹெலிகாப்டர் உடன் வந்த நடிகர் கூல் சுரேஷை ரசிகர்கள் சூழ்ந்துகொண்டனர். இதுகுறித்த வீடியோ காட்சிகள் வெளியாகி வைரலாகி வருகிறது.

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more