script type="application/ld+json"> { "@context": "https://schema.org", "@type": "WebSite", "name": "Asianet News Tamil", "url": "https://tamil.asianetnews.com", "potentialAction": { "@type": "SearchAction", "target": "https://tamil.asianetnews.com/search?topic={search_term_string}", "query-input": "required name=search_term_string" } }

நேரில் சந்தித்த நடிகர் யோகி பாபுவுக்கு விபூதி பூசி ஆசிர்வாதம் வழங்கிய முதல்வர்

Sep 4, 2023, 4:18 PM IST

புதுச்சேரி அரியாங்குப்பத்தில் உள்ள கோவில் திருவிழாவில் கலந்து கொள்வதற்காக பிரபல சினிமா காமெடி நடிகர் யோகி பாபு புதுச்சேரி வந்திருந்தார். அப்போது அவர் மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவையில் உள்ள அவரது அலுவலகத்தில் சந்தித்தார். அவருக்கு சால்வை அணிவித்து வரவேற்ற முதலமைச்சர் ரங்கசாமி இடம் தொடர்ந்து பத்து நிமிடம் யோகி பாபு பேசிக் கொண்டிருந்தார்.

அப்பொழுது முதலமைச்சர் ரங்கசாமி வழக்கம் போல் யோகி பாபுவை ஆசிர்வாதம் செய்தார். அப்போது அவரது அருகே  இருந்தவர்கள் அண்ணனே உங்களை ஆசீர்வாதம் செய்து விட்டார். இனிமே உங்களுக்கு எந்த குறையும் இருக்காது என்று கூறினார். அப்போது மீண்டும் ஒரு முறை முதலமைச்சர் ரங்கசாமியின் கையை பற்றி கொண்டு முத்தம் கொடுத்து வணங்கி விட்டு யோகி பாபு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தற்போது இந்த வீடியோ புதுச்சேரியில் வைரலாகி வருகிறது.