Oct 9, 2022, 1:40 PM IST
பிக்பாஸ் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில், இன்னும் ஒரு சில மணி நேரங்களில் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி மிகவும் பிரமாண்டமாக துவங்க உள்ளது. இந்த நிகழ்ச்சியை வழக்கம் போல் நம்மவர்... கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க உள்ளார். மேலும் இதுவரை இல்லாத அளவிற்கு போட்டியாளர்கள் சுமார் 21 பேர் இந்த முறை கலந்து கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிகழ்ச்சி நேற்றைய தினமே ஷூட் செய்து முடிக்கப்பட்டு விட்ட நிலையில், இன்று முதல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக உள்ளது. பல எதிர்பாராத முகங்கள், சில பார்த்த பிரபலங்கள், என கலவையான போட்டியாளர்களுடன் துவங்கும் இந்த பிக்பாஸ் நிகழ்ச்சி... மிகவும் கலர் ஃபுல்லாக ஆட்டம் பாடத்துடன் துவங்கியுள்ளது. இதுகுறித்த ப்ரோமோ தற்போது வெளியாகி ரசிகர்களால் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.