அசிங்கப்படுத்தப்படும் ஃபுட் டெலிவரி பாய் ..! சைக்கோவாக மாறுகிறாரா? அர்ஜுன் தாஸின் 'அநீதி' ட்ரைலர்!

Published : Jul 14, 2023, 08:06 PM ISTUpdated : Jul 14, 2023, 08:07 PM IST

இயக்குநர் ஷங்கர் தயாரிப்பில், வசந்த பாலன் இயக்கியுள்ள 'அநீதி' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 

தேசிய விருது பெற்ற இயக்குநர் G.வசந்த பாலன், நடிகர் அர்ஜுன் தாஸை ஹீரோவாக வைத்து இயக்கியுள்ள திரைப்படம் 'அநீதி'. தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாக உள்ள இந்த படத்தில் அர்ஜுன் தாஸ்க்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்துள்ளார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு 'பிளட் அண்டு சாக்லேட்' என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், இரண்டு மொழிகளிலும் ஒரே சமயத்தில் ஜூலை 21 அன்று உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் பிரமாண்டமான முறையில் வெளியாகிறது.

இப்படத்தின் புரோமோஷன் பணிகள் பரபரப்பாக சென்று கொண்டிருக்கும் நிலையில், தற்போது இப்படத்தின் ட்ரைலர் வெளியாகியுள்ளது. கடும் ட்ராபிக்கில்... உயிரை பணயம் வைத்து ஃபுட் டெலிவரி பாய்யாக வேலை செய்யும் ஒருவரை, செல்லும் இடமெல்லாம் அசிங்கப்படுத்தும் நிலையில், அவன் எப்படி சைக்கோவாக மாறுகிறார் என்பது பற்றி இப்படம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தற்போது படத்தின் ட்ரைலர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

02:35கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக அதகளம் பண்ணிய அஜித்... வைரலாகும் ‘தல’யின் கிரிக்கெட் வீடியோ !
02:57CM Vijay : மீண்டும் சினிமாவுக்கு வருகிறாரா தளபதி? இயக்குநர்கள் வைத்த கோரிக்கை; ஏற்பாரா விஜய்?
02:14Arasan : பாக்ஸ் ஆபிஸை பதம் பார்க்க வரும் சிம்பு... அரசன் படத்தின் ரிலீஸ் தேதி என்ன தெரியுமா?
01:53சிகிச்சை பலனின்றி உயிரிழந்த மனைவி... வலி தாங்க முடியாமல் கதறி அழுத நடிகர் முத்துக்காளை !
04:35கெனிஷாவும் போயிட்டா.. வாழ விடமாட்டியா ஆர்த்தி! கதறி அழுத ஜெயம் ரவி 💔
03:43மதுரையில் உற்சாகம் | சூர்யா நடிப்பில் உருவான ‘கருப்பு’ திரைப்படம் பிரம்மாண்ட கொண்டாடிய ரசிகர்கள் !
03:05Karuppu : ரிலீஸ் ஆகாத கருப்பு... கண்ணீர்விட்டு அழுதபடி ஆர்.ஜே.பாலாஜி..!
02:58Karuppu : சூர்யாவின் கருப்பு படத்தை கட்டாயம் பார்க்கத் தூண்டும் டாப் 5 காரணங்கள் என்னென்ன?
02:26Karuppu Movie First Show Cancelled! 😱 சூர்யா ரசிகர்களுக்கு இடியை இறக்கிய தயாரிப்பாளர்...!
02:10Sunny Leone Net Worth | அடேங்கப்பா கிளாமர் குயின் சன்னி லியோன் சொத்து மதிப்பு இத்தனை கோடியா?