தொடர்ந்து வித்தியாசமான கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்து வரும் ஃபர்ஹானா படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது.
 

இந்த படத்தை, ஒரு நாள் கூத்து, மான்ஸ்டர்போன்ற படங்களை இயக்கிய நெல்சன் வெங்கடேசன் இயக்கி உள்ளார். இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக நடிகர் ஜித்தன் ரமேஷ் நடித்துள்ளார்.  'ஃபர்ஹானா' என பெயரிடப்பட்டுள்ள இந்த படம் இஸ்லாமிய பெண்ணான ஐஸ்வர்யா ராஜேஷை சுற்றி நடக்கும் கதையாக மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ்,  இதுவரை ஏற்றிராத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.மேலும் இப்படத்தில் இயக்குநர் செல்வராகவன், கிட்டி, அனுமோல், ஐஸ்வர்யா தத்தா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள்.

ஃபர்ஹானா படத்திற்கு, கோகுல் பினாய் ஒளிப்பதிவாளராக பணிபுரிந்துள்ளார். மெலடி பாடல்கள் மூலம் இளைஞர்கள் மனதினைக் கொள்ளை கொண்டு வரும் ஜஸ்டின் பிரபாகரன் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். தேசிய விருது வென்ற சாபு ஜோசப் எடிட்டராக பணிபுரிந்துள்ளார். பிரபல கவிஞர் மற்றும் எழுத்தாளர் மனுஷ்யபுத்திரன் இத்திரைப்படத்தின் வசனங்களை எழுதியுள்ளார். படத்தின் திரைக்கதையை இயக்குநர் நெல்சனுடன் இணைந்து கதாசிரியர்கள் சங்கர் தாஸ் மற்றும் ரஞ்சித் ரவீந்திரன் எழுதியுள்ளனர்.  

இப்படத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்து விட்ட நிலையில், இப்படம் வரும் மே மாதம் 12 ஆம் தேதி ரிலீசாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. காக்கா முட்டை, லட்சுமி படங்களுக்கு பின்னர் இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குழந்தைகளுக்கு அம்மாவாக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

03:29கோடி கோடியாக சம்பாரிச்சலும் கலைஞனுக்கு கை தட்டால் ரொம்ப முக்கியம் - சித்ரா லட்சுமணன்
13:15MASK Movie Review | நடிகர் கவின் நடிப்பில் வெளியான மாஸ்க் திரைப்படம் எப்படி இருக்கு ? | Mask Review
02:39நான் தான் பவானிக்கு பவானி.. விஜய் சேதுபதி வில்லன் - வாட்டர் மிலன் ஸ்டார் திவாகர் பேட்டி
04:44அஜித்தும், விஜயும் எனது இரு கண்கள் மாதிரி... இருவருடனும் படங்களில் நடித்துள்ளேன் - நடிகர் வையாபுரி !
03:13திருச்செந்தூர் கோவிலில் மூதாட்டியிடம் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்ற நடிகர் ஆர்.ஜே பாலாஜி !
06:56நான் பயப்படவில்லை...என்கிட்ட உண்மை இருக்கு! Dubbing Artist சங்கீதா புகாருக்கு நடிகர் ராதாரவி பதிலடி
06:59குழந்தையின் சாபம் சும்மா விடாது, அவதூறு பரப்புறாங்க.. ஜாய் கிறிஸ்டில்லா பரபரப்பு
03:02நீங்க வந்தா டிஸ்கவுண்ட் கிடையாது, எங்க சங்கத்தினருக்கு மட்டும் தான் - நடிகர் கார்த்தி
02:31நடிகர் ரோபோ சங்கர் மறைவு.....அஞ்சலி செலுத்திய குடும்பத்தினர் மற்றும் திரைபிரபலங்கள் !
03:05மறைந்த நடிகர் ரோபோ சங்கரின் உடலுக்கு அஞ்சலி செலுத்திய நடிகர் சிவகார்த்திகேயன் !