குழந்தை பெற்றுக்கொள்ள தேதி நேரத்தை குறித்து கோபமாக வீடியோ வெளியிட்ட சமந்தா..!

Nov 19, 2019, 12:12 PM IST

தமிழ் சினிமாவில் 2010ல் வெளியான "பானா காத்தாடி" படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை சமந்தா.அதனை அடுத்து "நீதானே என் பொன் வசந்தம்", "நான் ஈ", "கத்தி", "24", 'மெர்சல்", மற்றும் "சூப்பர் டீலக்ஸ்' போன்ற படங்களின் மூலம் தன்னுடைய நேர்த்தியான நடிப்பை வெளிப்படுத்தி தமிழ் மக்களின் மனதில் இன்றளவும் கனவுக்கன்னியாக வலம் வருகிறார். தமிழ் மட்டுமல்லாது தெலுங்கு படங்களிலும் முன்னணி கதாநாயகியாக திகழ்கிறார். சினிமா அவார்ட், பிலிம்பேர் அவார்ட், விஜய் அவார்ட் போன்று 20க்கும் மேற்பட்ட விருதுகளை பெற்றுள்ளார்.

கடந்த 2017ம் ஆண்டு அக்டோபர் மாதம் தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். நடிகை சமந்தா திருமணம் முடிந்து 2 வருடங்களுக்கு மேல் ஆகிறது. தற்போது வரை சமந்தா குழந்தை பெற்றுக்கொள்ளவில்லை.தொடர்ந்து படங்களில் நடித்து வரும் நிலையில், குழந்தை பெற்று கொள்ளுவது பற்றிய கேள்வி சமூக வலைத்தளங்களில் நடிகை சமந்தாவிடம் பலரும் கேட்டு வருகின்றனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த சமந்தா,தனுது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில்  ஒருவருக்கு பதில் அளித்துள்ளார். "என் உடல் எப்படி function-ஆகிறது என கேட்பவர்களுக்கு, 7 ஆகஸ்ட் 7 மணி, 2022 வருடம் நான் குழந்தை பெற்றுக்கொள்வேன்" என தேதி நேரத்துடன் பதில் கூறியுள்ளார் நடிகை சமந்தா இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது