Oct 1, 2022, 3:37 PM IST
மணிரத்னத்தின் பிரம்மாண்ட படைப்பான பொன்னியின் செல்வனில் நடிகர் விக்ரம், ஆதித்த கரிகாலன் என்கிற பவர்புல்லான வேடத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு அவரது கதாபாத்திரத்திற்கும் கிடைத்து வரும் அமோக வரவேற்புக்கு நன்றி தெரிவித்து எமோஷனலாக பேசி நடிகர் விக்ரம் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான வரவேற்புக்கு நன்றி என கூறியுள்ள அவர், இதைவிட பெரிய சந்தோஷம் இருக்க முடியாது என கூறியுள்ளார். விக்ரம் பேசியுள்ள இந்த வீடியோ சோசியல் மீடியாவில் செம்ம வைரல் ஆகி வருகிறது.