திருப்பதி கோவிலில் இன்று விஐபி பிரேக் தரிசனம் மூலம் நடிகர் பிரபுதேவா அவரது மனைவி, குழந்தை, தந்தை சுந்தர மாஸ்டர் மற்றும் குடும்பத்தார் ஆகியோர் ஏழுமலையானை வழிபட்டனர்.
சாமி கும்பிடுவதற்காக திருப்பதி மலைக்கு வந்த அவர்கள் விஐபி பிரேக் தரிசனம் மூலம் கோவிலுக்கு சென்று ஏழுமலையானை கும்பிட்டனர். அதை தொடர்ந்து அவர்கள் கோவிலில் உள்ள ரங்கநாயகர் மண்டபத்தில் தேவஸ்தான அர்ச்சர்களிடம் வேத ஆசி, தீர்த்த பிரசாதம் ஆகியவற்றை பெற்று கொண்டனர்.
கோவிலில் இருந்து வெளியில் வந்த பிரபுதேவா உடன் தேவஸ்தான ஊழியர்கள் ரசிகர்கள் ஆகியோர் போட்டி போட்டு செல்பி எடுத்துக் கொண்டனர். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.