சிவராத்திரி பூஜையில் பங்கேற்பு - மயில்சாமி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி வீடியோ

சிவராத்திரி பூஜையில் பங்கேற்பு - மயில்சாமி இறப்பதற்கு முன் எடுக்கப்பட்ட கடைசி வீடியோ

Published : Feb 19, 2023, 12:01 PM IST

கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜையில் பங்கேற்ற நடிகர் மயில்சாமியின் கடைசி வீடியோ வைரலாகி வருகிறது.

நடிகர் மயில்சாமி நேற்று இரவு, சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜையில் கலந்துகொண்டார். தீவிர சிவ பக்தரான மயில்சாமி, நேற்று நள்ளிரவு 3 மணிவரை அந்த கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி பூஜையில் டிரம்ஸ் சிவமணி அருகே அமர்ந்து அவரது கச்சேரியையும் கேட்டு மகிழ்ந்துள்ளார்.

சிவராத்திரி பூஜை முடிந்து வீட்டுக்கு சென்ற மயில்சாமிக்கு அதிகாலை 3.30 மணியளவில் மாரடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து அவரை உடனடியாக போரூரில் உள்ள ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவரது உயிர் பிரிந்துள்ளது.

இந்நிலையில், ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜையில் நடிகர் மயில்சாமி கலந்துகொண்டபோது எடுத்த வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் செம்ம வைரல் ஆகி வருகிறது. 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?