இப்படி ஒரு பாட்டு பாத்திருக்கவே மாட்டீங்க; கவினின் Bloody Beggar - வெளியானது Beggar Waala சாங்!

இப்படி ஒரு பாட்டு பாத்திருக்கவே மாட்டீங்க; கவினின் Bloody Beggar - வெளியானது Beggar Waala சாங்!

Ansgar R |  
Published : Oct 25, 2024, 11:54 PM IST

Bloody Beggar : கவின் நடிப்பில் தீபாவளி ரிலீஸ் படமாக வெளியாகவுள்ளது ப்ளடி பெக்கர் என்ற படம். அப்படத்தில் இருந்து இரண்டாவது பாடல் வெளியாகியுள்ளது.

சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் தான் ப்ளடி பெக்கர். வருகின்ற தீபாவளி திருநாளன்று உலக அளவில் இந்த திரைப்படம் வெளியாகிறது. இதுவரை சாக்லேட் பாயாக வலம்வந்த கவின், இந்த படத்தில் ஒரு பிச்சைக்காரரின் வேடத்தை ஏற்று நடித்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி மக்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. இந்த திரைப்படத்தின் மூலம் பிரபல இயக்குனர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பாளராக களமிறங்குகிறார். மேலும் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய சிவபாலன் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

ஏற்கனவே இந்த படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தில் இருந்து பெக்கர் வாலா என்ற இரண்டாவது சிங்கிள் பாடல்  வெளியாகியுள்ளது. ஆனால் இந்த பாடல் திரைப்படத்தில் இடம்பெறாது என்று கூறப்படுகிறது. உண்மையில் நடிகர் கவினுக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக இந்த படம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.   
  
ஏற்கனவே இந்த ஆண்டு ஸ்டார் என்று படத்தில் அவர் நடித்திருந்த நிலையில் கிஸ், மாஸ்க், ப்ளடி பெக்கர் ஆகிய படங்கள் கவின் நடிப்பில் உருவாகி வருகின்றது. மேலும் பிரபல நடிகை நயன்தாராவுடன் ஒரு படத்தில் கவின் நடித்து வருவதும் குறிப்பிடத்தக்கது. 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more