சிறையில் R.J பாலாஜி; மெய்சிலிர்க்க வைக்கும் கதை - வெளியானது சொர்க்கவாசல் டீசர்! மாஸ்!

Ansgar R |  
Published : Oct 21, 2024, 07:30 PM IST

Sorgavaasal Teaser : முற்றிலும் மாறுபட்ட கதையம்சம் கொண்ட ஒரு படத்தில், ஆர் ஜே பாலாஜி நடித்திருக்கிறார். "சொர்க்கவாசல்" என்ற அந்த திரைப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி உள்ளது.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை காமெடி நடிகராக அறிமுகமாகி, அதன்பிறகு முன்னணி கதாபாத்திரங்கள் ஏற்று நடிக்க தொடங்கி, இன்று சிறந்த நடிகராகவும் இயக்குனராகவும் தமிழ் திரை உலகில் வலம் வந்து கொண்டிருப்பவர் தான் ஆர்.ஜே பாலாஜி. திரைத்துறைக்கு வருவதற்கு முன்னால், இவர் பண்பலை தொகுப்பாளராக பணியாற்றி வந்தது அனைவரும் அறிந்தது தான். 

அந்த காலகட்டத்திலேயே தமிழ் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமான ஆர்.ஜே பாலாஜி இப்பொழுது நல்ல பல தமிழ் திரைப்படங்களில் நடித்து வருகிறார். பிரபல நடிகை நயன்தாராவை வைத்து "மூக்குத்தி அம்மன்" என்ற திரைப்படத்தையும், "வீட்டில் விசேஷம்" என்கின்ற திரைப்படத்தையும் இயக்கியிருந்த ஆர்.ஜே பாலாஜி, தற்பொழுது பெண் தெய்வத்திற்கு பதிலாக ஆண் தெய்வமாக நடிகர் சூர்யாவை களம் இறக்கி, புதியதொரு திரைப்படத்தை இயக்க ஆயத்தமாகி வருகிறார். 

இந்த சூழலில் ஏற்கனவே இந்த ஆண்டு அவருடைய நடிப்பில் "சிங்கப்பூர் சலூன்" என்கின்ற திரைப்படம் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தற்பொழுது முற்றிலும் மாறுபட்ட ஒரு கதாபாத்திரத்தில் ஆர்.ஜே பாலாஜி அசத்தியிருக்கும் "சொர்க்கவாசல்" என்கின்ற திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில் அப்படத்தின் டீசர் தற்பொழுது வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ஸ்வைப் ரைட் ஸ்டுடியோஸ் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், கிறிஸ்டோ சேவியர் இசையில், சித்தார்த் விஸ்வநாதன் இயக்கத்தில் சொர்க்கவாசல் என்கின்ற இந்த திரைப்படம் உருவாகியுள்ளது. 

01:19திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நடிகர் சூரி சுவாமி தரிசனம் !
02:30டிஎன்ஏ ரிசல்டால் அம்பலமான உண்மை... ஜாய் கிரிசில்டா மகனுடன் கொஞ்சி விளையாடிய மாதம்பட்டி ரங்கராஜ்...!
02:55Spider Man : மார்வெல் ரசிகர்களுக்கு ட்ரீட்டா? வேட்டா? ஸ்பைடர்மேன் : பிராண்ட் நியூ டே விமர்சனம்
08:58தனுஷின் பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் : 30 மாவட்ட ஏழை குடும்பங்களுக்கு இலவச ஆட்டோ வழங்கீடு
02:29கமலா திரையரங்கில் ‘ஜன நாயகன்’ படத்தை ரசிகர்களுடன் கண்டு மகிழ்ந்த நடிகர் விமல் நெகிழ்ச்சி!
05:14Jana Nayagan Review : தளபதியின் ஜனநாயகன் டாப் கிளாஸா? டம்மி பீஸா? விமர்சனம் இதோ
03:14Jana Nayagan Review : விஜய்யின் ஜனநாயகன் பிளாஸ்டா? வேஸ்டா? முழு விமர்சனம் இதோ
03:11நீலகிரியில் ‘ஜனநாயகன்’ திருவிழா: ரசிகர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய அமைச்சர் மதன் ராஜா!
08:16திரையரங்குகளை ஸ்தம்பிக்க வைக்கும் விஜய் ரசிகர்கள்! – கேசினோ தியேட்டர் முன் கொண்டாட்ட அலை !
02:22ஐசியு, சர்ஜரி... ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அமிதாப் பச்சன் - பாலிவுட் சூப்பர்ஸ்டாருக்கு என்ன ஆச்சு?
Read more