
மஹிந்திரா நிறுவனத்தின் தார் ராக்ஸ் கார் கேரளா மாநிலத்தில் வெள்ள நீரில் எவ்வித சிக்கலும் இல்லாமல் எளிதாக கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
கார் பிரியர்கள் பெரும்பாலானோருக்கு சாலைகளில் ஓடக்கூடிய ரக்கட் கார் என்று சொன்னதுமே முதலில் நினைவுக்கு வருவது மஹிந்திரா நிறுவனத்தின் Thar Roxx கார் தான். அந்த அளவுக்கு இந்த கார் பெரும்பாலானோரின் கனவு காராக உள்ளது. இதனிடையே கேரளா மாநிலத்தில் பருவமழைத் தொடங்கி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்நிலையில் சாலையில் வெள்ள நீர் சூழ்ந்திருந்த தருணத்திலும் தார் ராக்ஸ் கார் எவ்வித தடங்கலும் இன்றி எளிமையாக வெள்ள நீரை கடந்து செல்லும் வீடியோ இணையத்தில் வைராகி வருகிறது. மேலும் அந்த வீடியோவில் காரை விடவும் பெரிய அளவில் உள்ள வாகனங்கள் வெள்ளத்தைக் கடக்க முடியாமல் ஓரமாக நிற்பதையும் வீடியோவில் காண முடிகிறது.