சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் முடிந்த கையோடு ஜீ தமிழில் அதகளமாக ஆரம்பமாக உள்ள அடுத்த ரியாலிட்டி ஷோ..!

Published : Dec 21, 2023, 04:21 PM IST
சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் முடிந்த கையோடு ஜீ தமிழில் அதகளமாக ஆரம்பமாக உள்ள அடுத்த ரியாலிட்டி ஷோ..!

சுருக்கம்

சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்த நிலையில் ஜீ தமிழின் அடுத்த ரியாலிட்டி ஷோ குறித்த அப்டேட் வந்துள்ளது.

தமிழ் சின்னத்திரையில் முன்னணி தொலைக்காட்சி சேனல்களில் ஒன்றாக மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது ஜீ தமிழ். இந்த சேனலில் ஒளிபரப்பாகும் சீரியல்களை தாண்டி சரிகமப, சரிகமப லிட்டில் சேம்ப்ஸ், டான்ஸ் ஜோடி டான்ஸ் போன்ற நிகழ்ச்சிகளுக்கு தனி ரசிகர் பட்டாளம் இருந்து வருகிறது. கோலாகலமாக தொடங்கிய சரிகமப லிட்டில் சேம்ப்ஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் கிராண்ட் பைனல் நிகழ்ச்சி மிக பிரம்மாண்டமாக நடந்து முடிந்தது, இதனை தொடர்ந்து ஜீ தமிழ் அடுத்ததாக டான்ஸ் ஜோடி டான்ஸ் reloaded நிகழ்ச்சியின் இரண்டாவது சீசனை களமிறக்க உள்ளது. 

ஆமாம், வரும் டிசம்பர் 23-ம் தேதி முதல் சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இரவு 7 மணிக்கு இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. கடந்த சீசனை போலவே இந்த முறையும் ஆர் ஜே விஜய் நிகழ்ச்சியை தொகுத்து வழங்க பாபா பாஸ்கர், சினேகா மற்றும் சங்கீதா ஆகியோர் நடுவர்களாக பங்கேற்க உள்ளனர். இதனால் இந்த நிகழ்ச்சி கலகலப்புக்கு பஞ்சம் இல்லாமல் பக்கா Fun Filled ஷோவாக இருக்கும் என நம்பலாம். 

ஏசியாநெட் தமிழ் செய்திகளை உடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Click this link: https://whatsapp.com/channel/0029Va9TFCWB4hdYZOoYCK2D

சாமானிய கலைஞர்களை சாதனையாளர்களாக மாற்றும் இந்த டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சியின் மெகா ஆடிஷனில் நடிகரும் இயக்குனருமான எஸ்.ஜே சூர்யா அவர்கள் சிறப்பு விருந்தினராக பங்கேற்று நடுவர்களுடன் இணைந்து போட்டியாளர்களை தேர்வு செய்ய இருப்பதாக தெரிய வந்துள்ளது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற ஆடிஷன் மூலமாக தேர்வு செய்யப்பட்ட 24 போட்டியாளர்கள் இந்த மெகா ஆடிஷனில் பங்கேற்க உள்ளனர். இவர்களில் இருந்து தேர்வு செய்யப்படும் 12 திறமையான போட்டியாளர்கள் அடுத்த கட்டத்திற்கு முன்னேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

சித்தாள் வேலை செய்பவர், ஆட்டோ ட்ரைவர், திருமண விழாக்களில் நடனமாடும் பெண், பரதநாட்டிய டான்சர், மாற்றுத்திறனாளி பலதரப்பட்ட வாழ்க்கை பின்னணியை கொண்ட பலர் போட்டியாளர்களாக பங்கேற்க உள்ளனர் என்பது அடுத்தடுத்து வெளியான ப்ரோமோ வீடியோக்கள் மூலமாக தெரிய வருகிறது. இதனால் இந்த முறையும் டான்ஸ் ஜோடி டான்ஸ் நிகழ்ச்சி மூலமாக பல சாமானியர்களின் வாழ்க்கை சாதனை பயணமாக மாறும் என எதிர்பார்க்கலாம். இந்த 12 போட்டியாளர்களுடன் இணைந்து நடனமாட போகும் 12 பிரபலங்கள் யார் என்பது குறித்த விவரங்கள் முதல் ரவுண்டான அறிமுக சுற்றின் மூலமாக தெரிய வரும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படியுங்கள்... 3 படம் அட்டர் பிளாப் ஆகியும் பிரபாஸுக்கு மவுசு குறையல! சலார் படத்துக்கு அவர் வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா?

PREV
click me!

Recommended Stories

பாசத்தை உலுக்கிய துயரங்கள்; பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பத்தில் நடந்த சோக சம்பவங்கள்!
சந்திரகலா மீது கொலை முயற்சி; கைது செய்யப்படும் சீரியல் நடிகர் கார்த்திக்: கார்த்திகை தீபம் சீரியல் ஹைலைட்ஸ்!