ராோகிணிக்கு கொடுத்த வாக்கை காப்பாற்றிய கார்த்திக்: வீட்டை மீட்கப்போவது எப்படி? - கார்த்திகை தீபம் 2 அப்டேட்!

Published : Sep 12, 2025, 02:19 PM IST
Karthigai Deepam 2 Serial Today Episode

சுருக்கம்

சாமுண்டீஸ்வரி கையால் ரோஹிணிக்கு துளசி தண்ணீர் கொடுக்க வைப்பதாக கார்த்திக் வாக்கு கொடுத்தான். இந்த வாக்கை நிறைவேற்ற, அவன் ஐந்து ஏழை ஜோடிகளுக்கு துளசி தண்ணீர் கொடுக்க ஒரு ஏற்பாடு செய்கிறான். இதற்கு சாமுண்டீஸ்வரியின் அனுமதியையும் பெறுகிறான்.

கார்த்திகை தீபம் 2 சிரியல் இன்று என்ன நடக்கும் என்பது பற்றி பார்க்கலாம். இந்த சீரியலில் மாசமாக இருக்கும் ரோகினிக்கு துளசி தண்ணீர் அவரது அம்மா தான் கொடுப்பார் என்று கார்த்திக் வாக்குறுதி கொடுப்பார். அதனை நிறைவேற்றுவரா என்பது பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அதாவது, கார்த்திக் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்கான வேலையில் ஈடுபட தொடங்குகிறான். இதற்காக ஒரு செட்டப் செய்து 5 ஏழை எளிய ஜோடிக்கு துளசி தண்ணீர் கொடுக்க ஏற்பாடு செய்கிறான். இதுகுறித்து சாமுண்டீஸ்வரியிடம் சொல்லி அனுமதியும் வாங்குகிறான்.

அடுத்து 5 ஜோடிகளின் ஒரு ஜோடியாக மயில்வாகனம் ரோஹிணியை சிங் வேஷத்தில் முகத்தை மூடியபடி பங்கேற்க வைக்கிறான். சாமுண்டீஸ்வரி இவர்களுக்கு துளசி தண்ணீர் கொடுக்கப்போகும் சமயத்தில் சந்திரகலாவுக்கு சந்தேகம் உருவாகிறது.

இதனால் மயில்வாகனம், ரோகினி உண்மை தெரிந்து விடுமோ என்று பயப்பட கார்த்திக் நிலைமையை சமாளிக்கிறான். பிறகு சிவனாண்டி சில ஆட்களை ஏற்பாடு செய்து கார்த்தியை பாலோ செய்ய சொல்கிறான். அடுத்து பஞ்சாயத்தை கூட்டுகின்றனர்.

இப்படியான நிலையில் அடுத்து நடக்கபோவது என்ன? இந்த பஞ்சாயத்தில் கார்த்திக் எப்படி உண்மையை நிரூபித்து சாமுண்டீஸ்வரி வீட்டை மீட்டெடுக்க போகிறான் என்பது குறித்து இன்றைய எபிசோடை பார்த்து தேரிந்து கொள்வோம்.

கார்த்திக், தான் கொடுத்த வாக்கை நிறைவேற்றுவதற்காக ஒரு திட்டத்தைத் தீட்டுகிறான். ஐந்து ஏழை ஜோடிகளுக்கு துளசி தண்ணீர் கொடுப்பதன் மூலம் சாமுண்டீஸ்வரியை சமாதானப்படுத்த முயல்கிறான். இந்த திட்டத்திற்கு சாமுண்டீஸ்வரியின் அனுமதியையும் பெறுகிறான்.

ஐந்து ஜோடிகளில் ஒரு ஜோடியாக, கார்த்திக் ரோஹிணியை மாறுவேடத்தில் அழைத்து வருகிறான். ஆனால், சந்திரகலாவுக்கு சந்தேகம் வர, கார்த்திக் நிலைமையைச் சமாளிக்கிறான். பின்னர், சிவனாண்டி சிலரை கார்த்திக்கை பின்தொடரச் சொல்கிறான். இறுதியில், ஒரு பஞ்சாயத்து கூட்டப்படுகிறது.

அடுத்த எபிசோடில், கார்த்திக் எப்படி இந்த பஞ்சாயத்தில் உண்மையை நிரூபித்து, சாமுண்டீஸ்வரியின் வீட்டைக் காப்பாற்றப் போகிறான் என்பதைப் பற்றித் தெரிந்துகொள்ள, ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் கார்த்திகை தீபம் தொடரைப் பார்க்க வேண்டும் என்று அந்த அப்டேட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது

கார்த்திக் அளித்த வாக்குறுதி

சாமுண்டீஸ்வரி கையால் ரோஹிணிக்கு துளசி தண்ணீர் கொடுக்க வைப்பதாக கார்த்திக் வாக்கு கொடுத்தான். இந்த வாக்கை நிறைவேற்ற, அவன் ஐந்து ஏழை ஜோடிகளுக்கு துளசி தண்ணீர் கொடுக்க ஒரு ஏற்பாடு செய்கிறான். இதற்கு சாமுண்டீஸ்வரியின் அனுமதியையும் பெறுகிறான்.

கார்த்திக்கின் திட்டம்

இந்த ஐந்து ஜோடிகளில் ஒரு ஜோடியாக, கார்த்திக் ரோஹிணியை மாறுவேடத்தில் அழைத்து வருகிறான். ஆனால், சாமுண்டீஸ்வரி அவர்களுக்கு துளசி தண்ணீர் கொடுக்கப் போகும் நேரத்தில் சந்திரகலாவுக்கு சந்தேகம் ஏற்படுகிறது. இதனால் மயில்வாகனம் மற்றும் ரோஹிணி பயப்படுகிறார்கள். கார்த்திக் நிலைமையைச் சமாளித்து, அவர்களின் உண்மை வெளிவராமல் பார்த்துக் கொள்கிறான்.

அடுத்தது என்ன?

இதற்குப் பிறகு, சிவனாண்டி சிலரை ஏற்பாடு செய்து கார்த்திக்கை பின்தொடரச் சொல்கிறான். பின்னர், ஒரு பஞ்சாயத்து கூட்டப்படுகிறது.

இந்த பஞ்சாயத்தில் கார்த்திக் எப்படி உண்மையை நிரூபித்து, சாமுண்டீஸ்வரியின் வீட்டை மீட்டெடுக்கப் போகிறான் என்பதை அறிய, உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் கார்த்திகை தீபம் சீரியலைக் காணத் தவறாதீர்கள்.

PREV
RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்: அப்பாவை கட்டிப்பிடித்து கதறி அழுத சரவணன் : கூலா வேடிக்கை பார்த்த மயில்!
டபுள் எவிக்‌ஷன்... பிக் பாஸ் வீட்டில் இருந்து இந்த வாரம் காலியாகப்போகும் 2 விக்கெட் யார்?