
பெர்ப்ளெக்ஸி AI ஸ்டார்ட்அப் நிறுவனத்தின் இணை நிறுவனர் அரவிந்த் ஸ்ரீனிவாஸ் உடன் உரையாடிய ஜெரோதா இணை நிறுவனர் நிகில் காமத், மூன்று மாதங்களுக்கு பெர்ப்ளெக்ஸி AI இல் இன்டர்ன்ஷிப் செய்ய விருப்பம் தெரிவித்தார். இலவசமாக வேலை செய்ய ஆர்வமாக இருப்பதாகவும் கூறினார். இந்த உரையாடல் சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
"நான் பெர்ப்ளெக்ஸியில் இன்டர்ன்ஷிப் செய்ய முடியுமா, மூன்று மாதங்கள் இலவசமாக வேலை செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?" என காமத் கேட்டார், ஸ்ரீனிவாஸ் ஆரம்பத்தில் இதை வேடிக்கையாக எடுத்துக்கொண்டு பதிலளித்தார். அந்த வேலையைவிட காமத் மிகவும் திறமையானவர் என்று கூறினார்.
அப்போது காமத் குறுக்கிட்டு தனது ஆர்வம் உண்மையானது என்று வலியுறுத்தினார். "இல்லை, நான் நிஜமாகவே விரும்புகிறேன். இது உண்மை. நான் சில மாதங்கள் அங்கு தங்கி, சில விஷயங்களைக் கற்றுக்கொள்ள விரும்புகிறேன். ஏனென்றால், இப்போது நான் போதுமான அளவு கற்றுக்கொள்ளவில்லை என்று நினைக்கிறேன்" என்றார்.
ஸ்ரீனிவாஸ் இந்த யோசனையை வரவேற்று, "உங்களை வரவேற்பதில் நாங்கள் மிகவும் பெருமையடைகிறோம்" என்றார். காமத் தனது விருப்பத்தில் தீவிரமாக இருந்தார். "நான் ஜோக் அடிக்கவில்லை. நான் அடுத்த 30 நாட்களில் அங்கே இருப்பேன். ஒவ்வொரு நாளும் உங்களைத் தொந்தரவு செய்வேன்" எனக் கூறினார்.
ஏடிஎம்மில் பணம் எடுக்க கூடுதல் கட்டணம்! மே 1 முதல் அமல்!
உரையாடலின்போது, அரவிந்த் ஸ்ரீனிவாஸ் பெங்களூரில் கொஞ்ச காலம் தங்கியிருந்ததை நினைவுகூர்ந்தார். அங்கு அவர் கோரமங்களாவில் மூன்று வாரங்கள் தங்கி இன்டர்ன்ஷிப் செய்ததாகவும், அப்போது வேலையிலேயே முழு கவனம் செலுத்தியதாகவும் கூறினார். பெரும்பாலான நேரம் வீட்டிலோ அலுவலகத்திலோ தான் கழித்ததாகவும் கூறிய அவர், பெங்களூரு நகரத்தின் மோசமான போக்குவரத்தைத் தவிர்த்ததாகவும் கூறினார்.
“இப்போது நிலைமை இன்னும் மோசமாக இருப்பதாகக் கேள்விப்பட்டேன்,” என்று ஸ்ரீனிவாஸ் கூறினார். போக்குவரத்தைத் தவிர்த்து இருக்கும் இடத்திலேயே வேலை செய்வது ஒரு புத்திசாலித்தனமான தேர்வாக இருக்கலாம் என்றும் கூறினார். ஆனால், பெங்களூருவில் சென்னையைவிட வானிலை நிச்சயமாக நன்றாக இருந்தது எனவும் நினைவுகூர்ந்தார்.
ஓலா, உபர் போல டாக்சி சேவை தொடங்கும் மத்திய அரசு; அமித் ஷா அறிவிப்பு
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.