
வருடத்தின் இறுதிக்கு வந்துவிட்டோம். இந்த 2025-ம் ஆண்டில் நாம் என்ன செய்தோம், எதை ரசித்தோம் என்பதைத் திரும்பிப் பார்ப்பது எப்போதுமே சுவாரஸ்யமானது. இசைப் பிரியர்களுக்கு 'Spotify Wrapped' எப்படி ஒரு கொண்டாட்டமோ, அதேபோல இப்போது வீடியோ பிரியர்களுக்கு யூடியூப் நிறுவனம் 'YouTube Recap' என்ற அட்டகாசமான வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது.
நீங்கள் இந்த ஆண்டு முழுவதும் என்ன பார்த்தீர்கள்? யாரை அதிகம் ரசித்தீர்கள்? உங்கள் மனநிலை எப்படி இருந்தது? என அனைத்தையும் ஒரு வண்ணமயமான தொகுப்பாக உங்களுக்கு வழங்குகிறது யூடியூப்.
உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான பயனர்களுக்காக இந்த வசதி உருவாக்கப்பட்டுள்ளது. "ஒவ்வொரு பயனரின் ரசனையும் தனித்துவமானது" என்று கூறும் யூடியூப், உங்கள் ஓராண்டு வீடியோ பார்க்கும் பழக்கத்தை 12 அழகான கார்டுகளாக (Cards) தொகுத்து வழங்குகிறது. இது வட அமெரிக்காவில் ஏற்கனவே பயன்பாட்டிற்கு வந்துவிட்ட நிலையில், இந்த வார இறுதிக்குள் உலகம் முழுவதும் உள்ள பயனர்களுக்குக் கிடைக்கும்.
மிக எளிது! உங்கள் மொபைல் அல்லது கம்ப்யூட்டரில் யூடியூப் செயலியைத் திறக்கவும்.
• முகப்புப் பக்கத்தில் (Home) நேரடியாக இது தோன்றலாம்.
• அல்லது "You" என்ற டேப்-பை (Tab) கிளிக் செய்தால், அங்கே உங்கள் Recap தொகுப்பைக் காணலாம்.
வெறுமனே நீங்கள் பார்த்த வீடியோக்களின் பட்டியலை மட்டும் இது தருவதில்லை. நீங்கள் எந்த வகையான வீடியோக்களை அதிகம் பார்த்தீர்கள் என்பதை வைத்து, உங்களுக்கு ஒரு 'பர்சனாலிட்டி டைப்' (Personality Type) வழங்கப்படுகிறது.
உதாரணத்திற்கு:
• Sunshiner (சன்ஷைனர்): எப்போதும் ஜாலியான, பாசிட்டிவ் மற்றும் உற்சாகமூட்டும் வீடியோக்களைப் பார்ப்பவர்.
• Curiosity Seeker (தேடல் விரும்பி): எப்போதும் புதிதாக எதையாவது தெரிந்துகொள்ளத் துடிப்பவர்.
• Connector (இணைப்பாளர்): சமூகம் சார்ந்த மற்றும் கம்யூனிட்டி வீடியோக்களில் ஆர்வம் கொண்டவர்.
• Philosopher (தத்துவவாதி): ஆழமான சிந்தனை மற்றும் நீண்ட நேர வீடியோக்களைப் பார்ப்பவர்.
இப்படி நீங்கள் யார் என்பதை யூடியூப் கணித்துச் சொல்வது பயனர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
YouTube Music பயன்படுத்துபவர்களுக்கு இந்த அனுபவம் இன்னும் சிறப்பாக இருக்கும்.
• அதிகம் கேட்ட பாடல்கள்.
• டாப் கலைஞர்கள் (Top Artists).
• எந்த வகை இசையை (Genre) அதிகம் விரும்பினீர்கள்?
• பாட்காஸ்ட் (Podcast) ட்ரெண்ட்ஸ்.
இவை அனைத்தும் ஒரு 'ரிதம் டைரி' (Rhythm Diary) போல உங்களுக்குக் கிடைக்கும்.
இந்த 'Recap' வசதி சாதாரணமாக உருவாக்கப்படவில்லை. பயனர்களுக்குச் சிறந்த அனுபவத்தைத் தர வேண்டும் என்பதற்காக, யூடியூப் நிறுவனம் 50-க்கும் மேற்பட்ட டிசைன்களை உருவாக்கி, 9 சுற்றுகளாகப் பயனர்களிடம் சோதனை செய்த பின்னரே இந்த இறுதி வடிவத்தை வெளியிட்டுள்ளது.
இதன் முக்கிய நோக்கமே, உங்கள் ஓராண்டு நினைவுகளை ஒரு கதைப்புத்தகம் போல மாற்றி, அதை நீங்கள் உங்கள் நண்பர்களுடன் சமூக வலைத்தளங்களில் பகிர்வதுதான். உடனே உங்கள் யூடியூப் ஆப்பை ஓப்பன் செய்து, உங்கள் 2025 ரீகேப் எப்படி இருக்கிறது என்று பாருங்கள்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.