
இன்றைய டிஜிட்டல் உலகில் சமூக வலைத்தளங்களின் தாக்கம் அதிகரித்து வருகிறது. உலகின் எந்தவொரு பகுதியில் எந்த நிகழ்வு நடந்தாலும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக அது உடனே நமக்கு கிடைத்து வருகிறது. இந்தியாவில் பேஸ்புக், எக்ஸ் (x) (முன்பு ட்விட்டர்), இன்ஸ்டாகிராம் ஆகியவை பிரபலமாக உள்ளன. இதில் எக்ஸ் (முன்பு ட்விட்டர்) தளம் முன்னிலையில் உள்ளது.
இந்தியாவில் பல கோடிக்கணக்கான மக்கள் எக்ஸ் (x) தளத்தில் கணக்கு வைத்து அதில் தகவல்களை பகிர்ந்து வருகின்றனர். இந்த நிலையில், எக்ஸ் (x) தளம் இன்று மாலை திடீரென முடங்கியது. எக்ஸ் (x) தளத்தில் தங்கள் பதிவுகளைப் (posts) பார்க்க முடியவில்லை என்று ஆயிரக்கணக்கான பயனர்கள் புகார் அளித்தனர். எக்ஸ் தளத்தில் செய்யப்படும் இடுகைகளைப் பார்க்கவோ அல்லது புதிய ட்வீட்களைப் பதிவேற்றவோ முடியவில்லை என அவர்கள் கூறினார்கள்.
சேவை முடக்கத்தைக் கண்காணிக்கும் தளமான டவுன்டிடெக்டரில் (Downdetector), எக்ஸ் தளம் முடங்கி விட்டதா சேவை முடங்கிவிட்டதா என்று பயனர்கள் கேள்வி எழுப்பினார்கள். இதனைத் தொடர்ந்து வலைத்தள செயலிழப்புகளைப் புகாரளிப்பதற்காக அறியப்பட்ட Downdetector வலைத்தளமும் செயலிழந்தது.
என்ன காரணம்?
ஆனாலும் டவுன்டிடெக்டரின் கூற்றுப்படி, இந்தியாவிலிருந்து மட்டும் இன்று மாலை மாலை 5.00 மணிக்குள் 988-க்கும் மேற்பட்ட பயனர்கள் எக்ஸ் தளத்தில் சிக்கல்களைப் புகாரளித்துள்ளனர். உலகளவில் இந்த புகார்களின் எண்ணிக்கை 11,320 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பிரச்சினை Cloudflare இன் செயலிழப்பால் உருவானதாக தகவல்கள் கூறுகின்றன.
Cloudflare என்பது வலைத்தளங்கள் மற்றும் பிற ஆன்லைன் தளங்களுக்கு பல முக்கிய தொழில்நுட்ப சேவைகளை வழங்கும் ஒரு இணைய உள்கட்டமைப்பு தளமாகும். எக்ஸ் (x) தளம் திடீரென முடங்கியது தொடர்பாக எக்ஸ் நிர்வாகம் அதிகாரப்பூர்வ அறிக்கையை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து சிறிது நேரத்துக்கு பிறகு எக்ஸ் தளம் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.