ChatGPT உலகளவில் முடங்கிய சாட்ஜிடிபி..! என்ன காரணம்? அடிக்கடி சிக்கலை சந்திப்பது ஏன்?

Published : Sep 03, 2025, 04:51 PM IST
ChatGPT Logo

சுருக்கம்

சாட்ஜிடிபி உலகளவில் இன்று மீண்டும் முடங்கியது. இதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பார்க்கலாம்.

ChatGPT Down Global Outage Reason Explained!! இன்றைய நவீன உலகில் Artificial intelligence (AI) எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலிகள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. அந்த வகையில் சாட்ஜிடிபி ChatGPT எனப்படும் செயற்கை நுண்ணறிவு செயலி உலகளவில் முன்னணியில் உள்ளது. கல்வி, அரசியல், ஆரோக்கியம், விளையாட்டு என உங்களுக்கு தேவையான அனைத்து தகவல்கள் விவரங்களை சாட்ஜிடிபி மூலமாக தெரிந்து கொள்ள முடியும்.

உலகளவில் முடங்கிய சாட்ஜிடிபி

இப்போது பெரும்பாலான நிறுவனங்கள் சாட்ஜிடிபி உதவியின் மூலம் தான் இயங்கி வருகின்றன. குறிப்பாக செய்தி நிறுவனங்கள் இதை நம்பி இருக்கும் நிலையில், இப்போது உலகளவில் சாட்ஜிடிபி சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. உலகளவில் சாட் ஜிபிடி பயனர்கள் தாங்கள் சிக்கலை எதிர்கொள்வதாக சமூக ஊடகங்கள் மூலம் தெரிவித்து வருகின்றனர். இணையதள செயல்பாடுகளை கண்காணிக்கும் டவுன் டிடெக்டர் வெளியிட்ட தகவல்படி, கடந்த 20 நிமிடங்களில் நூற்றுக்கணக்கான சாட் ஜிபிடி பயனர்கள் சிக்கலை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவிலும் சாட்ஜிடிபி இயங்கவில்லை

இந்தியாவிலும் சாட் ஜிபிடி பயனர்கள் தொழில்நுட்ப சிக்கலை எதிர்கொள்கின்றனர். இதுவரை 439 பயனர்கள் சிக்கலைப் புகாரளித்துள்ளதாக டவுன் டிடெக்டர் தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை உலகளவில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் டவுன் டிடெக்டர் குறிப்பிட்டுள்ளது. ஓபன்ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி பயன்பாட்டில் தங்களுக்கு எந்த சிக்கலும் இல்லை என்று சில பயனர்கள் சமூக ஊடகங்களில் தெரிவித்து வருகின்றனர். இதன் மூலம் சாட் ஜிபிடி சிக்கல் சில பயனர்களுக்கு மட்டுமே ஏற்பட்டுள்ளது என்பது தெரியவந்துள்ளது.

சாட்ஜிடிபி ஏன் செயலிழந்தது?

OpenAI அதன் அதிகாரப்பூர்வ நிலை பக்கத்தில் சாட்ஜிடிபி செயலிழந்ததை ஒப்புக்கொண்டது. வலை இடைமுகத்தில் ஏற்பட்ட முன்பக்க கோளாறால் இந்த செயலிழப்பு ஏற்பட்டதாக நிறுவனம் வெளிப்படுத்தியது. அதாவது சிக்கல் AI மாதிரியில் இல்லை, ஆனால் உலாவிகளில் பதில்கள் காட்டப்படும் விதத்தில் இருந்தது. இதனால்தான் பல பயனர்கள் ChatGPT மொபைல் பயன்பாடு (iOS மற்றும் Android) இன்னும் செயல்பாட்டில் இருப்பதைக் கவனித்தனர். அதே நேரத்தில் வலைத்தளம் பதில்களை ஏற்றத் தவறிவிட்டது. இத்தகைய குறைபாடுகள் பொதுவாக அதிக சுமை, சர்வர் பக்க பிழைகள் அல்லது புதிய புதுப்பிப்புகளின் பயன்பாடு காரணமாக நிகழ்கின்றன என்று ஓபன் ஏஐ விளக்கம் அளித்துள்ளது. இதனைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் ChatGPTமீண்டும் பழையபடி இயங்கத் தொடங்கியதால் பயனர்கள் நிம்மதி அடைந்தனர்.

அடிக்கடி முடங்கும் சாட் ஜிபிடி

கடந்த ஜனவரி 23, 2025 அன்றும் உலகளவில் சாட்ஜிபிடி சேவையில் இடையூறு ஏற்பட்டது. ஸ்பெயின், அர்ஜென்டினா, அமெரிக்காவில் உள்ள பயனர்களுக்கு சாட்ஜிபிடி சேவை பாதிக்கப்பட்டது. பின்னர் பிப்ரவரி 5 அன்றும் இதேபோல் நடந்தது. இருப்பினும் சிக்கல் சரி செய்யப்பட்டதால் சேவை வழக்கம்போல் தொடர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.

Read more Articles on
click me!

Recommended Stories

யூடியூப் பயனர்களுக்கு ஒரு 'ஜாலி' சர்ப்ரைஸ்! உங்கள் 2025 ஜாதகமே இதில் இருக்கு - செக் பண்ணிட்டீங்களா?
நாளை முதல் வேட்டை ஆரம்பம்! சாம்சங் S24 முதல் ஐபோன் வரை... பிளிப்கார்ட் அறிவித்த மெகா ஆஃபர்கள்!