வாட்ஸ்அப் செயலியில் யுபிஐ பயனர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டஉ இருக்கிறது.
இந்திய சந்தையில் புதிதாக இணைந்து இருக்கும் யுபிஐ பேமண்ட் சேவை வழங்கும் நிறுவனமாக வாட்ஸ்அப் இருக்கிறது. வாட்ஸ்அப் செயிலியில் பேமண்ட் சேவையை பயன்படுத்த வைக்க, அந்த நிறுவனம் அசத்தலான சலுகைகளை அறிவித்து, அவற்றை வழங்கி வருகிறது.
அதன்படி வாட்ஸ்அப் யுபிஐ மூலம் மூன்று பேருக்கு குறைந்த பட்சம் ஒரு ரூபாய் அனுப்பினால் ரூ. 105 வரை கேஷ்பேக் பெற முடியும். வாட்ஸ்அப் செயலியில் ஃபேஸ்புக் (மெட்டா) வைத்து இருக்கிறது. வாட்ஸ்அப் செயலியில் யுபிஐ பயனர்கள் எண்ணிக்கையை அதிகப்படுத்த இந்த முயற்சியை மேற்கொண்டு இருக்கிறது.
வாட்ஸ்அப் யுபிஐ கேஷ்பேக் சலுகையை பெறுவது எப்படி?
குறிப்பு: இந்த சலுகை தேர்வு செய்யப்பட்ட பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டு வருகிறது. ஒரு வேளை உங்களுக்கு இந்த சலுகை வழங்கப்பட்டு இருப்பின், பணம் அனுப்பும் ஸ்கிரீனில் கிப்ட் ஐகான் இருப்பதை பார்க்க முடியும்.
1 - முதலில் உங்களது ஸ்மார்ட்போனில் வாட்ஸ்அப் புதிய வெர்ஷன் இன்ஸ்டால் செய்யப்பட்டு உள்ளதா என்பதை உறுதிப் படுத்திக் கொள்ள வேண்டும். வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். மற்றும் ஆண்ட்ராய்டில் இவ்வாறு செய்ய வேண்டும்.
2 - செயலியை குறைந்தபட்சமாக 30 நாட்களாவது பயன்படுத்தி இருக்க வேண்டும்.
3 - வாட்ஸ்அப் பிஸ்னஸ் அக்கவுண்ட்களுக்கு இந்த சலுகை வழங்கப்படாது.
4 - வாட்ஸ்அப் பயன்படுத்தும் போது பேமண்ட் செட்-அப் செய்யக் கோரும் பேனரை காண முடியும்.
5 - இல்லை எனில், செட்டிங்ஸ் -- பேமண்ட்ஸ் -- ஆப்ஷனில் ஆபர் பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
6 - வாட்ஸ்அப் பேமண்ட் அக்கவுண்ட் செட்-அப் செய்து உங்களின் வங்கி அக்கவுண்ட் உடன் இணைக்க வேண்டும்.
7 - செட்-அப் நிறைவு பெற்றதும் குறைந்த பட்சம் ரூ. 1-ஐ, ஏற்கனவே பேமண்ட்ஸ் செட்-அப் செய்து இருக்கும் உங்களின் ஏதேனும் ஒரு வாட்ஸ்அப் காண்டாக்ட்களுக்கு அனுப்ப வேண்டும்.
8 - ஒரு வேளை அவர்களிடம் வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் செட்-அப் செய்யப்படவில்லை எனில், அவர்கள் செட்-அப் செய்த பின் பணம் அனுப்பலாம்.
9 - முழுமையான கேஷ்பேக் பெற, வாட்ஸ்அப் மூலம் மூன்று பேருக்கு பணம் அனுப்ப வேண்டும்.
10 - ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் ரூ. 35 வரையிலான கேஷ்பேக் அடிப்படையில், மொத்தமாக ரூ. 105 வரை பெற முடியும்.
வாட்ஸ்அப் பேமண்ட்ஸ் மற்றும் புதிய பேமண்ட்ஸ் கேஷ்பேக் சலுகை பற்றிய முழு விவரங்கள் வாட்ஸ்அப் ஹெல்ப் செண்டர் வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. முன்னதாக ஏப்ரல் மாதமும் இதேபோன்ற கேஷ்பேக் சலுகை அறிவிக்கப்பட்டது. எனினும், அப்போது ரூ. 33 மட்டுமே கேஷ்பேக் வழங்கப்பட்டு இருந்தது.