இனி வாட்ஸ்அப் பயன்படுத்த போன் நம்பர் தேவையில்ல! பாதுகாப்பைக் கூட்டும் புது அப்டேட்!

By SG Balan  |  First Published Aug 20, 2024, 7:23 PM IST

மொபைல் நம்பர் தவிர பயனர் பெயர் மற்றும் பின் நம்பரையும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு விரைவில் கிடைக்க உள்ளது. பயனர் பெயர் ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் ஃபோன் எண்களை மறைத்து வைத்துக்கொள்ளலாம்.


மெட்டா நிறுவனம் வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமையை மேம்படுத்தும் நோக்கில் புதிய அம்சங்களை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. அந்த வகையில், மொபைல் நம்பருக்குப் பதிலாக பயனர் பெயர் (Username) மற்றும் பின் (PIN) நம்பரை புதிய ஆப்ஷனாக கொண்டுவர உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

இந்தப் புதிய அம்சம் பயனர்கள் தங்கள் தொலைபேசி எண்களுக்குப் பதிலாக பயனர் பெயர்களை மாற்ற மாற்ற அனுமதிக்கும். இது பயனர்களின் பிரைவசிக்கு கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது. இந்த மாற்றத்தின் மூலம் வாட்ஸ்அப் பயனர்கள் தங்கள் மொபைல் எண்களை அனைவருடனும் பகிர வேண்டிய அவசியம் இருக்காது.

Tap to resize

Latest Videos

மொபைல் நம்பர் தவிர பயனர் பெயர் மற்றும் பின் நம்பரையும் பயன்படுத்திக்கொள்ளும் வாய்ப்பு விரைவில் கிடைக்க உள்ளது. பயனர் பெயர் ஆப்ஷனை தேர்ந்தெடுப்பதன் மூலம், பயனர்கள் தங்கள் ஃபோன் எண்களை மறைத்து வைத்துக்கொள்ளலாம். அப்போது, மற்றவர்களுக்கு பயனர்பெயர் மட்டும் காண்பிக்கப்படும்.

ஆனால், ஏற்கனவே மொபைல் நம்பரை வைத்திருக்கும் நபர்கள் தொடர்ந்து மொபைல் நம்பரைப் பார்க்க முடியும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். அதே சமயத்தில் புதிய நபர்களுக்கு பயனர்பெயர் மட்டுமே தெரியும்.

இன்னொரு ஆப்ஷனாக உள்ள நான்கு இலக்க PIN நம்பரை குறிப்பிட்ட நபர்களுடன் பகிரலாம். இந்த பின் உள்ளவர்கள் மட்டுமே வாட்ஸ்அப்பில் தொடர்புகொள்ள முடியும். இது வாட்ஸ்அப் பயனர்களின் தனியுரிமைக்கு அதிக பாதுகாப்பை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. இதிலும் போன் நம்பரை ஏற்கெனவே வைத்திருப்பவர்கள் பின் நம்பர் இல்லாமலே மெசேஜ் அனுப்ப முடியும்.

இந்த புதிய அம்சம், அறிமுகமில்லாதவர்கள் வாட்ஸ்அப் மூலம் தொடர்புகொள்வதைக் கட்டுப்படுத்த உதவுகிறது. வாட்ஸ்அப் 2.24.18.2 ஆண்ட்ராய்டு பீட்டா வெர்ஷன் வைத்திருந்தால் இந்த அம்சத்தை இப்போதே பயன்படுத்த முடியும். ஆண்ட்ராய்டு பயனர்கள் அனைவருக்கும் இந்த அம்சம் கிடைக்க இன்னும் கொஞ்ச நாள் காத்திருக்க வேண்டும்.

இது மட்டுமின்றி வாட்ஸ்அப் மற்றொரு அம்சத்தையும் விரைவில் கொண்டுவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பயனர்கள் ஸ்டேட்டஸ் அப்டேட்களுக்கு "லைக்" செய்யும் ஆப்ஷன் இன்னொரு அப்டேட்டில் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த அம்சம், ஏற்கெனெவே இன்ஸ்டாகிராம் ஸ்டோரி லைக்குகளைப் போலவே செயல்படும்.

click me!