
இனி 28 நாட்களுக்கு வெறும் ரூ.20 தான்..! அதிரடி சலுகையை அறிவித்தது வோடபோன்..!
தங்களது வாடிக்கையாளர்களை நிலைநிறுத்திக்கொள்ள வோடஃபோன் ஐடியா நிறுவனம் குறைந்தபட்ச ரீசார்ஜ் கட்டணத்தை அறிவித்துள்ளது.
அதாவது சிம் கார்டை ஆக்டிவ் நிலையில் வைக்க ஒவ்வொரு மாதமும் 35 ரூபாய் ரீசார்ஜ் செய்ய வேண்டும். எனவே வாடிக்கையாளர்களின் நலன் கருதி இந்த தொகையை குறைத்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. எனவே மாதம் தோறும் ரூ. 20 செலுத்தி ரீசார்ஜ் செய்துக்கொண்டாலே போதும்.
28 நாட்களுக்கான வேலிடிட்டி உடன் இந்த திட்டம் அமலில் உள்ளது மேலும் வாடிக்கையாளரின் நலன் கருதி ஆண்டு சந்தா கட்டண முறையை அமலுக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டு உள்ளது.
சந்தையில் ஜியோ வருகைக்கு பிறகு மற்ற தொலைத்தொடர்பு நிறுவனங்கள் நஷ்டத்தை சந்தித்தன. இந்த நிலையில் போட்டியை சமாளிக்கவும் வேறு நிறுவன சேவைக்கு தங்களது வாடிக்கையாளர்கள் மாறாமல் இருக்க வோடஃபோன் மற்றும் ஐடியா நிறுவனம் சந்தா தொகையையும் குறைத்து உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.