
உங்கள் மொபைலில் குவியும் தேவையற்ற எஸ்எம்எஸ்கள் தொந்தரவாக இருக்கிறதா? ஸ்பேம், விளம்பரங்கள், வங்கி தகவல்கள், OTP-கள் என அனைத்தும் உங்கள் இன்பாக்ஸை நிரப்பிவிடும். ஸ்பேம் அழைப்புகளை எதிர்த்துப் போராடுவதில் பெயர் பெற்ற ட்ரூகாலர் இதற்கு ஒரு தீர்வை அளித்ததுள்ளது. ‘செயற்கை நுண்ணறிவு மெசேஜ் ஐடி’ என்ற புதிய அம்சத்தைக் கொண்டுவந்துள்ளது.
இந்தியா உட்பட 30 நாடுகளில் கிடைக்கும் இந்த புதிய அம்சம், செயற்கை நுண்ணறிவை உங்கள் எஸ்எம்எஸ் இன்பாக்ஸில் கொண்டுவருகிறது. LLM மூலம் இயக்கப்படும் மெசேஜ் ஐடிகள், எந்தத் தரவையும் வேறு சர்வர்களுக்கு மாற்றாமல், உங்கள் சாதனத்திலேயே முக்கிய தகவல்களை அடையாளம் கண்டு சுருக்கமாகக் கூறுகின்றன. இதன் விளைவாக, மிக முக்கியமான தகவல்களை மேலேடுத்துக் காட்டும்.
இந்த அம்சம் இந்தி, ஸ்பானிஷ், ஸ்வாஹிலி உள்ளிட்ட எந்த மொழியிலும் உள்ள செய்திகளை திறம்பட அடையாளம் கண்டு சிறப்பாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது பிரீமியம் மற்றும் இலவச பயனர்கள் இருவருக்கும் கிடைக்கும்.
ட்ரூகாலருக்கு உங்கள் எஸ்எம்எஸ்-ஐப் படிக்கவும், மற்ற செயலிகளின் மீது உள்ளடக்கத்தைக் காட்டவும் அனுமதி வழங்குவது மட்டுமே தேவை. பல செய்திகளைப் படிக்காமலேயே, விமான மாற்றங்கள், டெலிவரி அப்டேட் அல்லது கட்டண நினைவூட்டல்கள் போன்ற முக்கிய தகவல்களைப் பெறலாம்.
பிஷிங் மற்றும் மோசடி முயற்சிகள் குறித்த கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், ட்ரூகாலர் சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களின் மெசேஜ்களுக்கு இப்போது பச்சை நிற டிக் மார்க் மூலம் அங்கீகாரம் வழங்குகிறது. பச்சை டிக் மார்க் இருந்தால், டெலிவரி அப்டேட் உண்மையானது என்பதை நீங்கள் உறுதியாக நம்பலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.