Samsung Galaxy F14 5G: அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வந்தது!

By Asianet TamilFirst Published Mar 31, 2023, 5:55 PM IST
Highlights

சாம்சங் நிறுவனம் அண்மையில் அறிமுகம் செய்த Samsung Galaxy F14 5G ஸ்மார்ட்போன் தற்போது விற்பனைக்கு வந்துள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பு சலுகை விவரங்ளை இங்குக் காணலாம்.

சாம்சங் நிறுவனம் F சீரிஸில் புதிதாக 5ஜி ஸ்மார்ட்போனை அண்மையில் அறிமுகம் செய்தது. இதில்  எக்ஸினோஸ் 1330 பிராசசர், 6000mAh பேட்டரி, 6.6-இன்ச் FHD+ 90Hz, 13 விதமான 5G பேண்டுகள் உள்ளன. மொத்தம் மூன்று வண்ணங்கள் கிடைக்கின்றன: அவை  OMG கருப்பு, GOAT Green மற்றும் BAE ஊதா ஆகும்.
சாம்சங் கேலக்ஸி F14 5G: விலை மற்றும் சலுகைகள்

4ஜிபி+128ஜிபி மாடலின் விலை ரூ.14,490 என்றும், இதே போல் 6ஜிபி+128ஜிபி மெமரி மாடலின் விலை ரூ.15,990 என்றும் விற்பனைக்கு வந்துள்ளது. ஆனால், வங்கி கார்டு ஆஃபர்களைப் பயன்படுத்தி வாங்கும் போது, Samsung Galaxy F14 5G விலை ரூ.12,990, மற்றும் ரூ.14,490 ரூபாய்க்கு வாங்கலாம். இன்று முதல் இந்த ஸ்மார்ட்போன் விற்பனைக்கு கிடைக்கிறது. வாடிக்கையாளர்கள் இதனை சாம்சங், பிளிப்கார்ட் ஆன்லைன் ஷாப்பிங்கிலும், வெளிக்கடைகளிலும் பெற்றுக்கொள்ளலாம்.

Samsung Galaxy F14 5G போனிலுள்ள அம்சங்கள்

Samsung Galaxy F14 போனில் 6.6-இன்ச் FHD+ IPS டிஸ்ப்ளே 90Hz ரெப்ரெஷ் ரேட் உள்ளன. பாதுகாப்புக்காக கொரில்லா கிளாஸ் 5 உள்ளது. சாம்சங்கின் எக்ஸினோஸ் 1330 பிராசசர் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இது  5 nm பிராசசர் என்பதால் செயல்திறன் சிறப்பாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  4GB மற்றும் 6GB மெமரி, 128 ஜிபி மெமரி என இரண்டு மாடல்களில் வருகிறது பயனர்கள் ரேமை 12ஜிபி வரை அதிகரிக்கலாம். 

OnePlus 11 Jupiter Rock மாடல் அறிமுகம்! அது என்ன ஜூப்பிட்டர் ராக்? அசத்தல் கண்டுபிடிப்பு

கேமராவைப் பொறுத்தவரையில், டூயல் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. 50MP பிரைமரி கேமரா, 2MP மேக்ரோ சென்சார் கேமரா உள்ளன. போனின் முன்புறத்தில் செல்ஃபி, வீடியோ கால்களுக்காக 13MP கேமரா உள்ளது. ஸ்மார்ட்போனில் 25W ரேபிட் சார்ஜிங் வசதியும், அதற்கு ஏற்ப 6000mAh பேட்டரியும் உள்ளது. Galaxy F14 5G ஆனது ஒரு கோர் 5.1, ஆண்ட்ராய்டு 13 இயங்குதளத்தைக் கொண்டுள்ளது. இது இரண்டு வரையிலான ஆண்ட்ராய்டு OS அப்டேட்டுகளையும், நான்கு பாதுகாப்பு அப்டேட்டுகளையும் பெறும் என்று கூறப்படுகிறது. மற்றபடி, வழக்கம் போல் போனின் பக்கவாட்டில் பவர் பட்டனும், அதிலேயே கைரேகை சென்சாரும் உள்ளது. 13 வகையான 5G பேண்டுகள் இருப்பது சிறப்பு.

click me!