
Xiaomi-யின் துணை நிறுவனமான Redmi, அதன் புதிய Redmi 15 5G ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தியுள்ளது. 7,000mAh EV-கிரேடு சிலிக்கான்-கார்பன் பேட்டரியுடன் வருகிறது. இந்த விலையில் இந்த புதிய பேட்டரி தொழில்நுட்பத்தைக் கொண்ட முதல் சாதனம் இதுவாகும். இது பேட்டரி ஆயுளை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பெரிய பேட்டரியுடன் இருந்தாலும் ஸ்லிம்மாக இருக்க உதவுகிறது.
ரெட்மி 15 5G-யின் விலை இந்தியாவில் ₹14,999-ல் இருந்து தொடங்குகிறது.
ஆகஸ்ட் 28 முதல் Xiaomi இணையதளம், Amazon மற்றும் ஆஃப்லைன் கடைகளில் விற்பனைக்கு வரும். மிட்நைட் பிளாக், ஃப்ரோஸ்டி ஒயிட் மற்றும் சாண்டி பர்பிள் ஆகிய மூன்று நிறங்களில் கிடைக்கும்.
6.9-இன்ச் Full HD+ LCD திரை:
ஸ்னாப்டிராகன் 6s Gen 3 சிப்செட்:
7,000mAh சிலிக்கான்-கார்பன் பேட்டரி, 33W வேக சார்ஜிங் மற்றும் 18W ரிவர்ஸ் சார்ஜிங்.
Android 15 அடிப்படையிலான HyperOS 2.0, 2 வருட OS புதுப்பிப்புகள் மற்றும் 4 வருட பாதுகாப்பு பேட்ச்கள். Google Gemini மற்றும் Circle to Search AI அம்சங்கள்.
₹15,000-க்குள், Redmi 15 5G சிறந்த பேட்டரி ஆயுள், 144Hz டிஸ்ப்ளே மற்றும் 5G செயல்திறனை வழங்குகிறது.