ஸ்மார்ட்போன் விலையில் ரூ. 2 ஆயிரம் தள்ளுபடி.. விற்பனைக்கு வரும் உலகின் மெல்லிய 5ஜி போன்...!

By Kevin Kaarki  |  First Published May 12, 2022, 4:31 PM IST

ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் பக்கவாட்டு பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.


மோட்டோரோலா நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் தனது புதிய மிட் ரேன்ஜ் 5ஜி ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. மோட்டோரோலா எட்ஜ் 30 என அழைக்கப்படும் புது ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் OLED, 10 பிட் கலர் ஸ்கிரீன், HDR10+, 144Hz ரிப்ரெஷ் ரேட், குவால்காம் ஸ்னாப்டிராகன் 778G+ பிராசஸர், அதிகபட்சம் 8GB ரேம் மற்றும் ஆண்ட்ராய்டு 12 ஓ.எஸ். வழங்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படங்களை எடுக்க 50MP பிரைமரி கேமரா, 50MP அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, மேக்ரோ ஆப்ஷன் மற்றும் 2MP டெப்த் சென்சார் மற்றும் 32MP செல்பி கேமரா வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த ஸ்மார்ட்போனில் இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு உள்ளது. ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்ட மோட்டோரோலா எட்ஜ் 30 ப்ரோ ஸ்மார்ட்போனில் பக்கவாட்டு பவர் பட்டனிலேயே கைரேகை சென்சார் வழங்கப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது.

Tap to resize

Latest Videos

undefined

6.79mm அளவு தடிமனாக இருக்கும் புதிய மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் உலகின் மிக மெல்லிய 5ஜி ஸ்மார்ட்போன் ஆகும். இத்துடன் மேட் பினிஷ் மற்றும் கார்னிங் கொரில்லா கிளாஸ் 3 பாதுகாப்பு வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4020mAh பேட்டரி, டர்போ பவர் 30 பாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்பட்டு உள்ளது.

மோட்டோரோலா எட்ஜ் 30 அம்சங்கள்:

- 6.5 இன்ச் 2400x1080 பிக்சல் FHD+ OLED 144Hz டிஸ்ப்ளே
- ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 778G+ 6nm பிராசஸர்
- அட்ரினோ 642L GPU
- 6GB/ 8GB LPDDR5 ரேம்
- 128GB UFS 3.1 மெமரி
- ஆண்ட்ராய்டு 12 மற்றும் MyUX
- டூயல் சிம் ஸ்லாட்
- 50MP பிரைமரி கேமரா, f/1.88, OIS
- 50MP 118° அல்ட்ரா வைடு கேமரா, f/2.2 (2.5cm மேக்ரோ ஆப்ஷன்)
- 2MP டெப்த் சென்சார், f/2.4
- 32MP செல்பி கேமரா, f/2.25
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யு.எஸ்.பி. டைப் சி ஆடியோ, ஸ்டீரியோ ஸ்பீக்கர், டால்பி அட்மோஸ்
- ஸ்பிலாஷ் ரெசிஸ்டண்ட் (IP52)
- 5ஜி, டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை 6E 802.11ax (2.4GHz/5GHz) MIMO, ப்ளூடூத் 5.2, GPS
- யு.எஸ்.பி. டைப் சி
- 4020mAh பேட்டரி
- 33W டர்போ பவர் பாஸ்ட் சார்ஜிங்

மோட்டோரோலா எட்ஜ் 30 ஸ்மார்ட்போன் அரோரா கிரீன் மற்றும் மீடியோர் கிரே நிறங்களில் கிடைக்கிறது. இதன் 6GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 27 ஆயிரத்து 999 என்றும் 8GB ரேம், 128GB மெமரி மாடல் விலை ரூ. 29 ஆயிரத்து 999 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. இதன் விற்பனை மே 19 ஆம் தேதி துவங்குகிறது. அறிமுக சலுகையாக இந்த ஸ்மார்ட்போன் வாங்குவோர் தேர்வு செய்யப்பட்ட வங்கி கார்டுகளை பயன்படுத்தும் போது ரூ. 2 ஆயிரம் உடனடி தள்ளுபடி பெற முடியும்.

click me!