ஐபோன் 16 சீரிஸ் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு! கூடவே களமிறங்கும் புதிய ஏர்பாட், ஆப்பிள் வாட்ச்!

By SG BalanFirst Published Aug 24, 2024, 8:23 PM IST
Highlights

செப்டம்பர் 10ஆம் தேதி திட்டமிட்டுள்ள ஒரு நிகழ்வில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் தயாராகி வருகிறதுழ அதைத் தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதி விற்பனை தொடங்கும் என ப்ளூம்பெர்க் தெரிவித்துள்ளது.

ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த தயாராகி வரும் நிலையில், வெளியீட்டு தேதியை ப்ளூம்பெர்க் கசிய விட்டுள்ளது. வரும் செப்டம்பர் 10ஆம் தேதி வெளியீட்டு நிகழ்ச்சியை நடத்த ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக ப்ளூம்பெர்க் கூறியுள்ளது.

ப்ளூம்பெர்க் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, அடுத்த வெளியீட்டு நிகழ்வில், ஆப்பிள் நிறுவனம் புதிய அம்சங்களுடன் கூடிய ஆப்பிள் வாட்ச் (Apple Watch) மற்றும் ஏர்பாட் (AirPods) மாடல்களையும் வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு வெளியாகும் ஆப்பிளின் ப்ரோ மாடல்கள் சற்றே பெரிய டிஸ்பிளே கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது.

Latest Videos

ஐபோன் 16 மொபைல்களில் கேமராவுக்காக பிரத்யேகமாக 'கேப்சர்' (Capture) பட்டன் ஒன்றும் இருக்கும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

OPPO F27 5G: பிரமிக்க வைக்கும் Halo Light, AI அம்சங்களுடன் Oppo 5G மொபைல்!!

செப்டம்பர் 10ஆம் தேதி திட்டமிட்டுள்ள ஒரு நிகழ்வில் ஐபோன் 16 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகப்படுத்த ஆப்பிள் தயாராகி வருகிறது என விஷயம் அறிந்தவர்கள் கூறுகின்றனர் என ப்ளூம்பெர்க் சுட்டிக்காட்டுகிறது. ஏற்கெனவே இந்த ஆண்டு நான்கு மாடல்களில் ஐபோன் வெளியாகும் என்று தகவல்கள் வெளிவந்தன. iPhone 16 , iPhone 16 Plus, iPhone 16 Pro மற்றும் iPhone 16 Pro Max ஆகியவை எதிர்பார்க்கப்படுகின்றன.

வெளியீட்டைத் தொடர்ந்து செப்டம்பர் 20ஆம் தேதி இவை விற்பனைக்கு வரலாம் எனக் ப்ளூம்பெர்க் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆப்பிள் ஐபோன் 16 சீரிஸ் விரைவாக புகைப்படங்கள் எடுக்க கேப்சர் பட்டனுடன் வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.

ஐபோன் 16 ப்ரோ மற்றும் ஐபோன் 16 ப்ரோ மேக்ஸ் ஆகிய ப்ரோ மாடல்களில் மேம்படுத்தப்பட்ட அல்ட்ரா-வைட் ஆங்கிள் கேமரா இருக்கும் என்கிறார்கள். இது முந்தைய மாடல்களைவிட பெரியது. இதே போல் பேட்டரியும் சற்று பெரிய அளவில் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

ஐபோன் 15 ப்ரோ மற்றும் ஐபோன் 15 ப்ரோ மேக்ஸ் ஆகியவற்றுக்கு மட்டும் இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஆப்பிள் AI அம்சங்களுக்கான அப்டேட் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபோன் 16 வரிசையில் உள்ள நான்கு மாடல்களும் அறிமுகமாகும்போதே ஆப்பிளின் புதிய AI தொழில்நுட்பத்துடன் கிடைக்கும். இந்தப் புதிய அம்சங்கள் ஐபோன் 16 மாடல்களின் விற்பனையை அதிகரிக்க உதவும் என்று ஆப்பிள் நிறுவனம் கணக்கு போடுகிறது.

ஆப்பிளுக்கு இப்படி ஒரு சென்டிமெண்ட் இருக்கா? ஐபோன் 16 ரிலீஸ் தேதி தள்ளிப் போகுமா?

click me!