இனி வருடம் முழுவுதும் ரீசார்ஜ் பண்ண வேண்டிய அவசியமே இல்ல! BSNLன் அசத்தலான திட்டம்

Published : Feb 22, 2025, 03:19 PM IST
இனி வருடம் முழுவுதும் ரீசார்ஜ் பண்ண வேண்டிய அவசியமே இல்ல! BSNLன் அசத்தலான திட்டம்

சுருக்கம்

365 நாட்களுக்கு வரம்பற்ற அழைப்புகள் மற்றும் டேட்டாவுடன் கூடிய சிறந்த BSNL திட்டத்தை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

பொதுத்துறை தொலைத்தொடர்பு நிறுவனமான பிஎஸ்என்எல் மலிவு விலையில் சிறந்த ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டங்களை வழங்கி வருகிறது. தற்போது, ஒரு கவர்ச்சிகரமான ரீசார்ஜ் திட்டத்தை பிஎஸ்என்எல் சமூக ஊடகங்கள் மூலம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தில் ரூ.1999 முதலீட்டில் 365 நாட்களுக்கு இணையம், அழைப்புகள் மற்றும் எஸ்எம்எஸ் ஆகியவற்றை வழங்குகிறது.

பிஎஸ்என்எல்-ன் ரூ.1999 ப்ரீபெய்ட் ரீசார்ஜ் திட்டத்தின் சிறப்பம்சங்களை விரிவாகப் பார்க்கலாம். இந்த திட்டத்தில் ரூ.1999 செலுத்தி ரீசார்ஜ் செய்தால், பிஎஸ்என்எல் 365 நாட்களுக்கு வேலிடிட்டி வழங்குகிறது. இந்த காலக்கட்டத்தில் பயனர்களுக்கு 600 ஜிபி அதிவேக டேட்டா கிடைக்கும். இந்த டேட்டா வரம்பு முடிந்த பிறகு, இணைய வேகம் 40 Kbps ஆக குறையும். இது தவிர, பிஎஸ்என்எல் ரூ.1999 ரீசார்ஜ் திட்டத்தில் வரம்பற்ற குரல் அழைப்புகளையும் வழங்குகிறது. மேலும், தினமும் 100 இலவச எஸ்எம்எஸ்-களும் கிடைக்கும். பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப் (BSNL SELFCARE APP) மூலம் ரீசார்ஜ் செய்யலாம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போன் பயனர்கள் கூகிள் பிளே ஸ்டோரிலும், ஐபோன் பயனர்கள் ஆப்பிள் ஆப் ஸ்டோரிலும் பிஎஸ்என்எல் செல்ஃப் கேர் ஆப்-ஐ பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பிஎஸ்என்எல் நிறுவனம் பல சிக்கனமான ரீசார்ஜ் திட்டங்களை அறிமுகப்படுத்தினாலும், அழைப்பு துண்டிப்பு மற்றும் இடையூறு போன்ற பிரச்சனைகள் இருப்பதாக பயனர்கள் புகார் கூறுகின்றனர். இந்த குறைபாடுகளை சரிசெய்ய பிஎஸ்என்எல் முயற்சிகள் மேற்கொண்டு வருகிறது. நாடு முழுவதும் 1 லட்சம் 4ஜி டவர்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ள பிஎஸ்என்எல், இதுவரை 65,000-க்கும் அதிகமான 4ஜி தளங்களை அமைத்துள்ளது. தமிழகத்திலும் பிஎஸ்என்எல் 4ஜி சேவை விரிவாக்கம் வேகமாக நடைபெற்று வருகிறது.

PREV
Read more Articles on
click me!

Recommended Stories

இந்தியர்களுக்கு அதிரடி சரவெடி ஆஃபர் வழங்கிய அம்பானி.. ரூ.799க்கு அசத்தலான போன்
ஆஹா.. இப்படி ஒரு ஆஃபரா..! இனி வீட்டுக்கு வீடு BSNL தான்.. 11 மாதத்திற்கான அட்டகாசமான பிளான்