
இன்றைய தொழில்நுட்ப உலகில், புதுப்புது அம்சங்களுடன் ஸ்மார்ட்போன்கள் அணிவகுத்து வருகின்றன. நம்ம தேவைக்கு ஏற்ற போன் எதுன்னு கண்டுபிடிக்கிறது கொஞ்சம் கஷ்டமான விஷயம்தான். காதலர் தினம் போல ஸ்மார்ட் போன் காதலர்களுக்கான மாதம் இந்த பிப்ரவரி மாதம். இந்த மாதத்தில் ஸ்மார்ட்போன்கள் மற்றும் பிற சாதனங்கள் சிறந்த விற்பனை மற்றும் தள்ளுபடியுடன் சந்தையில் கிடைக்கிறது.. விவோ, ஒன்பிளஸ் மற்றும் பிற முன்னணி நிறுவனங்களின் ரூ.30,000 க்குள் கிடைக்கும் ஐந்து ஸ்மார்ட்போன்களைப் பத்தி சிம்பிளாப் பாக்கலாம்!
1. மோட்டோரோலா எட்ஜ் 50 ப்ரோ (Motorola Edge 50 Pro): மின்னல் வேக செயல்திறன்!
இந்த போன்ல ஸ்னாப்டிராகன் 7 ஜென் 3 சிப்செட் இருக்கு. இது ஒரு பவர்ஃபுல் பிராசஸர். அதனால கேம் விளையாடலாம், வீடியோ பார்க்கலாம், எது செஞ்சாலும் ஸ்பீடா இருக்கும். 144Hz ரிஃப்ரெஷ் ரேட் கொண்ட பெரிய டிஸ்ப்ளே வேற லெவல்! போட்டோ எடுக்கவும் சூப்பரான கேமரா கொடுத்திருக்காங்க. மொத்தத்துல இது ஒரு பெர்ஃபார்மன்ஸ் பேக்!
2. ஒன்பிளஸ் நோர்ட் 4 (OnePlus Nord 4): ஸ்டைலும், பவரும் ஒண்ணா!
ஒன்பிளஸ்னாலே ஸ்டைல்தான். இந்த போனும் அதுக்கு விதிவிலக்கல்ல. ஸ்னாப்டிராகன் 7+ ஜென் 3 பிராசஸர் மற்றும் 120Hz AMOLED டிஸ்ப்ளேவோட வந்திருக்கு. கேமராவும் நல்லா இருக்கு. பேட்டரி லைஃபும் சூப்பரா இருக்கும். ஸ்டைலா ஒரு போன் வேணும்னா இது நல்ல சாய்ஸ்.
3. ரியல்மி 14 ப்ரோ+ (Realme 14 Pro+): கேமரா பிரியர்களுக்கானது!
இந்த போனின் ஹைலைட்டே கேமராதான். 50MP மெயின் கேமரா, 8MP அல்ட்ரா-வைட், 50MP பெரிஸ்கோப் கேமரானு அசத்தலான காம்பினேஷன். 120x ஜூம் வேற! போட்டோகிராபி ஆர்வலர்களுக்கு இது ஒரு வரப்பிரசாதம். பெரிய டிஸ்ப்ளேவும், பவர்ஃபுல் பிராசஸரும் இருக்கு.
4. போக்கோ எக்ஸ்7 ப்ரோ (Poco X7 Pro): பவர்ஃபுல் பெர்ஃபாமன்ஸ், வேற லெவல்ல!
போக்கோ எப்பவுமே பெர்ஃபார்மன்ஸுக்கு பேமஸ். இந்த போன்ல மீடியா டெக் டைமென்சிட்டி 8400 அல்ட்ரா பிராசஸர் இருக்கு. கேமிங்கிற்கு இது வேற லெவல். டிஸ்ப்ளேவும் சூப்பரா இருக்கு. பேட்டரியும் ரொம்ப நேரம் வரும். பட்ஜெட்ல ஒரு பவர்ஃபுல் போன் வேணும்னா இது பெஸ்ட் சாய்ஸ்.
5. விவோ V40e (Vivo V40e): ஸ்டைலும், அம்சங்களும் நிறைஞ்சது!
விவோ V40e ஸ்டைலான டிசைன்ல வந்திருக்கு. HDR10+ சப்போர்ட் கொண்ட டிஸ்ப்ளே கலர்ஃபுல்லா இருக்கும். கேமராவும் நல்லா இருக்கு. AI அம்சங்கள் வேற கொடுத்திருக்காங்க. மொத்தத்துல இது ஒரு பேலன்ஸ்டு போன்.
இந்த ஐந்து போன்களுமே வெவ்வேறு அம்சங்களோட வந்திருக்கு. உங்க தேவை என்னன்னு தெரிஞ்சுக்கிட்டு, அதுக்கு ஏத்த மாதிரி போனைத் தேர்ந்தெடுங்க.