Tata Altroz DCT: அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்டிற்கு தேதி குறித்த டாடா மோட்டார்ஸ்

By Kevin Kaarki  |  First Published Mar 15, 2022, 2:46 PM IST

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் அல்ட்ரோஸ் மாடலின் புது வெர்ஷனை விரைவில் அறிமுகம் செய்ய இருக்கிறது.


டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் அல்ட்ரோஸ் பிரீமியம் ஹேட்ச்பேக் மாடல் இந்திய சந்தையில் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டது முதல் சீரான இடைவெளியில் அல்ட்ரோஸ் மாடலில் புது அம்சங்கள் மற்றும் சிறு மாற்றங்களை டாடா மோட்டார்ஸ் அவ்வப்போது செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது அல்ட்ரோஸ் மாடலுக்கு புதிய அப்டேட் வழங்க டாடா மோட்டார்ஸ் முடிவு செய்துள்ளது.

அதன்படி டாடா அல்ட்ரோஸ் ஹேட்ச்பேக் மாடலில் ஆட்டோமேடிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்பட இருக்கிறது. இந்திய சந்தையில் புதிய அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்ட் மார்ச் 21 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய அல்ட்ரோஸ் ஆட்டோமேடிக் வேரியண்டிற்கான முன்பதிவு ஏற்கனவே துவங்கி நடைபெற்று வருகிறது. இந்த மாடலுக்கான முன்பதிவு கட்டணம் ரூ. 21 ஆயிரம் ஆகும். 

Tap to resize

Latest Videos

புதிய DCT கியர்பாக்ஸ் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 86 ஹெச்.பி. திறன் வெளிப்படுத்துகிறது. புதிய 7 ஸ்பீடு டூயல் கிளட்ச் கியர்பாக்ஸ் 1.2 லிட்டர், 3 சிலிண்டர், பெட்ரோல் என்ஜினுடன் வழங்கப்படுகிறது. இந்த என்ஜின் 86 பி.ஹெச்.பி. திறன், 113 நியூட்டன் மீட்டர் டார்க் இழுவிசையை வெளிப்படுத்துகிறது. 

டாடா அல்ட்ரோஸ் DCT டாப் எண்ட் வேரியண்ட்களில் பெரிய தொடுதிரை வசதி கொண்ட ஸ்கிரீன் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அல்ட்ரோஸ் DCT கியர்பாக்ஸ் XT, XZ, XZ+ மற்றும் டார்க் எடிஷன் வேரியண்ட்களில் வழங்கப்படுகிறது. பெரிய தொடுதிரை ஸ்கிரீன் மட்டுமின்றி அல்ட்ரோஸ் மாடல் முற்றிலும் புதிய புளூ நிறத்தில் வழங்கப்பட இருக்கிறது. 

இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டதும் புதிய அல்ட்ரோஸ் DCT மாடல் ஹூண்டாய்  i20 DCT, மாருசி சுசுகி பலேனோ AMT, டொயோட்டா கிளான்சா AMT, ஹோண்டா ஜாஸ் CVT மற்றும் ஃபோக்ஸ்வேகன் போலோ AT போன்ற மாடல்களுக்கு போட்டியாக அமையும். 

அல்ட்ரோஸ் மாடலில் வழங்கப்பட இருக்கும் DCT யூனிட் ஜாஸ், பலேனோ மற்றும் கிளான்சா போன்ற மாடல்களில் வழங்கப்பட்டு இருக்கும் வழக்கமான CVT மற்றும் AMT யூனிட்களை விட முற்றிலும் வித்தியாசமானது ஆகும். இந்த பிரிவில் DCT கியர்பாக்ஸ் கொண்ட ஒரே ஹேட்ச்பேக் மாடலாக ஹூண்டாய் i20 இருக்கிறது. 

முன்னதாக டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது சஃபாரி, நெக்சான், பன்ச் மற்றும் ஹேரியர் போன்ற மாடல்களின் காசிரங்கா எடிஷனை விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இதுதுவிர கார் மாடல்களில் CNG கிட் வழங்குவது மற்றும் எலெக்ட்ரிக் மாடல்களிலும் டாடா மோட்டார்ஸ் அதிக கவனம் செலுத்தி வருகிறது.

click me!