
தமிழ்நாடு அரசு வேலையை எதிர்பார்த்துக் காத்திருக்கும் இளைஞர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் (TANUVAS) பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. உதவியாளர், ஓட்டுநர், சுருக்கெழுத்தர் உட்பட மொத்தம் 60 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கான தகுதிகள் மற்றும் விண்ணப்பிக்கும் முறைகளை இங்கே விரிவாகக் காண்போம்.
இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பின் மூலம் மொத்தம் 60 இடங்கள் நிரப்பப்பட உள்ளன. ஒவ்வொரு பதவிக்குமான காலியிடங்கள் பின்வருமாறு:
• Subject Matter Specialist: 24 பணியிடங்கள்
• Programme Assistant: 16 பணியிடங்கள்
• Farm Manager: 04 பணியிடங்கள்
• Assistant: 04 பணியிடங்கள்
• Stenographer Grade – III: 04 பணியிடங்கள்
• Driver: 08 பணியிடங்கள்
• Skilled Support Staff – I: 08 பணியிடங்கள்
பல்வேறு நிலைகளில் வேலைவாய்ப்புகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், 10-ம் வகுப்பு முதல் முதுகலை பட்டம் வரை படித்தவர்களுக்கு வாய்ப்புகள் உள்ளன.
• Skilled Support Staff & Driver: 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓட்டுநர் பணிக்கு ஓட்டுநர் உரிமம் அவசியம்.
• Stenographer: 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• Programme Assistant & Assistant: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் ஏதேனும் ஒரு இளங்கலை பட்டம் (Degree) பெற்றிருக்க வேண்டும்.
• Farm Manager: வேளாண்மை அல்லது தொடர்புடைய துறையில் இளங்கலை பட்டம் அவசியம்.
• Subject Matter Specialist: தொடர்புடைய துறையில் முதுகலை பட்டம் (Master’s Degree) பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் பணியாளர்களுக்கு அவர்கள் வகிக்கும் பதவிக்கு ஏற்ப தமிழ்நாடு அரசு ஊதிய முறைப்படி சம்பளம் வழங்கப்படும்.
• குறைந்தபட்சமாக ரூ.18,000 முதல் அதிகபட்சமாக ரூ.1,77,500 வரை மாதச் சம்பளம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உதாரணமாக, உதவியாளர் மற்றும் பண்ணை மேலாளர் பணிக்கு ரூ.35,400 முதல் ரூ.1,12,400 வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்பதாரர்கள் 18 வயது பூர்த்தி அடைந்தவராகவும், 32 வயதுக்கு மிகாதவராகவும் இருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணமாக எஸ்சி/ எஸ்டி (SC/ST) பிரிவினருக்கு ரூ.250/- என்றும், மற்ற அனைத்து பிரிவினருக்கும் ரூ.500/- என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த வேலைக்குத் தபால் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவம் மற்றும் தேவையான சான்றிதழ் நகல்களை இணைத்து, விண்ணப்பக் கட்டணத்துடன் கீழ்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
The Director of Extension Education,
Tamil Nadu Veterinary and Animal Sciences University,
Skill Development Centre Building,
Madhavaram Milk Colony, Chennai - 600 051.
விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி தேதி: 12.01.2026 மாலை 5 மணிக்குள்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.