சாம்சங் விரும்பிகளுக்கு செம ட்ரீட்.. சீக்கிரமே வரப்போகுது Galaxy M55 5G - எப்போது? உத்தேச விலை & ஸ்பெக் இதோ!

By Ansgar R  |  First Published Mar 19, 2024, 4:42 PM IST

Samsung Galaxy M55 5G : சாம்சங் நிறுவனம் இன்னும் அதிகாரப்பூர்வமாக தனது சாம்சங் Galaxy M55 5G போன் பற்றிய தகவல்களை வெளியிடவில்லை என்றும், அது குறித்த தகவல்கள் இணையத்தில் தொடர்ச்சியாக பரவி வருகின்றது.


Galaxy M55 5G சமீபத்தில் Dekra சான்றிதழ் தளத்தில் காணப்பட்டதாக பிரபல நிறுவனம் ஒன்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. மேலும் வெளியான தகவலின்படி இந்த போன் 4,855mAh பேட்டரியுடன் பட்டியலிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது வழக்கமான 5,000mAh பேட்டரியாக சந்தைப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 45W "வயர்டு ஃபாஸ்ட் சார்ஜிங்கை" இந்த போன் ஆதரிக்கும் என்று அறிக்கை மேலும் கூறியது.

அறிக்கையின்படி, Samsung Galaxy M55 5G ஆனது FCC சான்றிதழ் தளத்திலும் காணப்பட்டுள்ளது என்றும், இது 5G, 4G LTE, Wi-Fi மற்றும் புளூடூத் இணைப்புடன் பொருத்தப்பட்டிருக்கும் என்பதையும் தெரிவித்துள்ளது.நெம்கோ சான்றிதழ் இணையதளத்தில் SM-M556E/DS என்ற மாடல் எண்ணுடன் தொலைபேசி காணப்பட்டது என்றும் அந்த அறிக்கை கூறியது. ஆகவே இந்த புதிய போன் நானோ வகையில் இரு சிம் போடக்கூடிய போனாக இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Latest Videos

undefined

ஒன்ப்ளஸ் நார்ட் 4 அறிமுகம்.. தேதி குறித்த OnePlus.. விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் என்ன?

Samsung Galaxy M55 5G ஆனது, கடந்த மார்ச் 2023ல் வெளியிடப்பட்ட Samsung Galaxy M54 5Gஐ சற்று கூடுதல் அம்சங்களோடு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. Galaxy M54ஐ பொறுத்தவரை 8GB RAM மற்றும் 256GB வரையிலான Internal Memoryயுடன் வெளியானது, ஆகவே இந்த புதிதாய் மடலும் அதே அளவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது . 

6.78 இன்ச் (17.22 செமீ) FHD+, AMOLED டிஸ்பிலே கொண்ட இந்த புதிய போன் இந்திய சந்தையில் சுமார் 32,000 ரூபாய்க்கு விற்பனையாகலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்பார்ப்பை எகிறவைக்கும் அம்சங்கள்.. இந்தியாவில் இன்று வெளியாகிறது ரியல்மி நார்சோ 70..

click me!