சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் இந்திய விலையை அறிவித்தது.
சாம்சங் நிறுவனம் கேலக்ஸி எஸ்22 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை கடந்த வாரம் அறிமுகம் செய்தது. இதில் கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா என மூன்று மாடல்கள் இடம்பெற்றுள்ளன. கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடலில் முதல் முறையாக எஸ் பென் ஸ்டைலஸ் வசதி கொண்டிருக்கிறது. இந்தியாவில் மூன்று ஸ்மார்ட்போன் மாடல்களிலும் குவால்காம் ஸ்னாப்டிராகன் 8 ஜென் 1 பிராசஸர் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஏற்கனவே அறிமுகம் செய்யப்பட்டு விட்ட நிலையில், தற்போது மூன்று ஸ்மார்ட்போன்களின் இந்திய விலையை சாம்சங் அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. இதுபற்றிய அறிவிப்பு ஆன்லைன் நிகழ்வு மூலம் வெளியிடப்பட்டது.
விலை விவரங்கள்
சாம்சங் கேலக்ஸி எஸ்22 8GB + 128GB ரூ. 72,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 8GB + 256GB ரூ. 76,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 8GB + 128GB ரூ. 84,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 பிளஸ் 8GB + 256GB ரூ. 88,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அலட்ரா 12GB + 256GB ரூ. 1,09,999
சாம்சங் கேலக்ஸி எஸ்22 அலட்ரா 12GB + 512GB ரூ. 1,18,999
புதிய கேலலக்ஸி எஸ்22 மற்றும் கேலக்ஸி எஸ்22 பிளஸ் ஸ்மார்ட்போன்கள் ஃபேண்டம் பிளாக், ஃபேண்டம் வைட் மற்றும் கிரீன் நிறங்களில் கிடைக்கிறது. சாம்சங் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா மாடல் பர்கண்டி, ஃபேண்டம் பிளாக் மற்றும் ஃபேண்டம் வைட் நிறங்களில் கிடைக்கிறது.
ஏற்கனவே கேலக்ஸி எஸ்22, கேலக்ஸி எஸ்22 பிளஸ் மற்றும் கேலக்ஸி எஸ்22 அல்ட்ரா ஸ்மார்ட்போன்களை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு முன்பதிவு சலுகைகள், கேலக்ஸி ஸ்மார்ட் டேக் இலவசமாக வழங்கப்படும். முன்பதிவு விவரங்கள் மற்றும் இதர சலுகைகள் பற்றிய அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை.