பேடிஎம் பயனர்கள் கவனிங்க... UPI பேமெண்ட் பிரச்சினையை சரிசெய்ய ரிசர்வ் வங்கியின் புதிய நடவடிக்கை

By SG BalanFirst Published Feb 24, 2024, 9:41 AM IST
Highlights

பேடிஎம் நிறுவனத்தின் @paytm என்று முடியும் UPI முகவரியைத் தவிர வேறு UPI முகவரிகளைப் பயன்படுத்துபவர்கள் இது தொடர்பாக எதுவும் செய்யத் தேவையில்லை.

யூபிஐ (UPI) மூலம் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் தடையின்றி நடத்தப்பதை உறுதி செய்வதற்கான கூடுதல் நடவடிக்கைளை இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. @paytm என்ற UPI முகவரியை பயன்படுத்தும் பயனர்களுக்கு மட்டும் ஆர்பிஐ புதிய வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

பேடிஎம் நிறுவனத்தின் @paytm என்று முடியும் UPI முகவரியைத் தவிர வேறு UPI முகவரிகளைப் பயன்படுத்துபவர்கள் இது தொடர்பாக எதுவும் செய்யத் தேவையில்லை.

ரிசரவ் வங்கியின் புதிய வழிகாட்டுதல்கள் சொல்வது என்ன?

பேடிஎம் அப்ளிகேஷன் மூலம் தொடர்ந்து UPI பரிவர்த்தனையைத் தொடரும் வகையில், பேடிஎம் (Paytm) நிறுவனத்தின் கோரிக்கையைப் பரிசீலிக்குமாறு இந்திய தேசிய பேமெண்ட் கழகத்திற்கு (NPCI) ஆர்பிஐ அறிவுறுத்தியுள்ளது.

நிலவில் தரையிறங்கிய முதல் தனியார் நிறுவன லேண்டர்! அப்பல்லோவுக்குப் பின் சாதித்த ஒடிசியஸ்!

UPI பரிவர்த்தனைகளில் எந்த இடையூறும் ஏற்படாமல் இருக்க, அனைத்து @paytm UPI முகவரிகளையும் பேடிஎம் பேமெண்ட் வங்கியிலிருந்து வேறு வங்கிகளின் UPI முகவரிக்கு மாற்றுவதை உறுதிசெய்யவும் கேட்டுக்கொண்டுள்ளது. ஏற்கெனவே உள்ள அனைத்து பயனர்களும் புதிய UPI முகவரிக்கு மாற்றப்படும் வரை, புதிய பயனர்கள் யாரும் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் கூறியுள்ளது.

இந்த மாற்றம் சுமூகமாக நடக்க, அதிக அளவு UPI பரிவர்த்தனைகளைச் செயல்படுத்தும் திறன் கொண்ட நான்கைந்து வங்கிகளுக்கு பேமெண்ட் சேவை வழங்கும் (PSP) வங்கிகளாக சான்றளிக்கவும் ரிசர்வ் வங்கி தேசிய பேமெண்ட் கழகத்திடம் கேட்டுள்ளது.

Paytm QR குறியீடுகளைப் பயன்படுத்தும் வணிகர்களுக்கு பி.எஸ்.பி. (PSP) வங்கிகளில் செட்டில்மெண்ட் கணக்குகள் தொடங்குவதற்கும் வழிவகை செய்ய ஆர்பிஐ நடவடிக்கை எடுப்பதாகக் கூறியுள்ளது.

பிப்ரவரி 29 முதல் பேடிஎம் பேமெண்ட் வங்கிக் கணக்குகள் அல்லது வாலட்களில் புதிய டெபாசிட்களைப் பெறுவதை நிறுத்துமாறு பேடிஎம் நிறுவனத்தின் தாய் நிறுவனமான ஒன் 97 கம்யூனிகேஷன்ஸு க்கு கடந்த ஜனவரி மாதம் ஆர்பிஐ உத்தரவிட்டது. பின்னர் அந்த காலக்கெடு மார்ச் 15 வரை நீட்டிக்கப்பட்டது.

செம சூடு... திடீரென தீப்பிடித்து கையைப் பொசுக்கிய ஐபோன் சார்ஜர்!

click me!