
ஆப்பிளின் நான்காம் தலைமுறை SE ஸ்மார்ட்போன் (Apple iPhone SE 4) வர இன்னும் இரண்டு நாட்களே உள்ளன. பிப்ரவரி 19 அன்று ஆப்பிள் குடும்பத்தின் புதிய உறுப்பினரை அறிமுகப்படுத்துவோம் என்று ஆப்பிள் CEO டிம் குக் பிப்ரவரி 13 அன்று அறிவித்தார். இந்த வெளியீடு ஐபோன் SE 4-னுடையது என்று ஆப்பிள் உறுதிப்படுத்தவில்லை என்றாலும், ஆப்பிள் குடும்பத்தில் அடுத்து வரவிருக்கும் உறுப்பினர் ஐபோன் SE 4 தான் என்று ஃபோர்ப்ஸ் உறுதிப்படுத்துகிறது.
ஃபோர்ப்ஸின் அறிக்கை
பிப்ரவரி 19 அன்று ஆப்பிள் ஐபோன் SE 4 வெளியிடப்படும் என்று சர்வதேச ஊடகமான ஃபோர்ப்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது. இதை ப்ளூம்பெர்கும் உறுதிப்படுத்துகிறது. அறிமுக விழாவிற்கு இதுவரை ஊடகங்களுக்கு அழைப்பு வரவில்லை என்பதால் புதிய தலைமுறை SE 4-ன் அறிமுகம் பெரிய பொது நிகழ்வாக இருக்காது, மாறாக ஆப்பிள் நியூஸ் வலைத்தளம், apple.com/newsroom போன்றவற்றின் வழியாக செய்திக்குறிப்பு மூலம் புதிய ஐபோனை நிறுவனம் அறிமுகப்படுத்த வாய்ப்புள்ளது.
புதிய தயாரிப்பைப் பற்றி விரிவாக விவரிக்கும் ஒரு வீடியோவை ஆப்பிள் வெளியிட வாய்ப்புள்ளது. அப்படியானால் ஆப்பிளின் முக்கிய வலைத்தளத்திலும் நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலிலும் வீடியோ வெளியிடப்படும். பிப்ரவரி 19 அன்று இந்திய நேரப்படி மாலையில் ஐபோன் SE 4 ஐ ஆப்பிள் வெளியிட வாய்ப்புள்ளது. ஐபோன் SE 4-ன் முன்பதிவு எப்போது தொடங்கும், விற்பனை எப்போது தொடங்கும் என்பதை ஃபோர்ப்ஸ் அறிக்கையில் விவரித்துள்ளது.
21-ஆம் தேதி இந்திய நேரப்படி மாலையில் ஐபோன் SE 4 முன்பதிவு தொடங்கும் என்று தெரிகிறது. விற்பனை பிப்ரவரி 28 அன்று தொடங்கும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எப்படியிருந்தாலும், ஐபோன் SE 4 வெளியீடு குறித்த ஆப்பிளின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என்று எதிர்பார்க்கலாம்.
50 வயதில் ஓய்வு: 40 வயதில் சம்பாதிக்க வேண்டிய தொகை எவ்வளவு?
ரூ.9 ஆயிரம் முன்பணம்; ஒரே சார்ஜில் 165 கிமீ தரும் ஹீரோ எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாம்!
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.