Poco M6 Plus : கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி இந்திய சந்தையில் தனது பட்ஜெட் செக்மென்ட் ஸ்மார்ட் போன் ஒன்றை பிரபல POCO நிறுவனம் வெளியிட்டது.
இந்திய சந்தையில் கடந்த ஆகஸ்ட் 1ம் தேதி Poco M6 Plus 5G மொபைல் வெளியானது. இந்நிலையில் நாளை மறுநாள் ஆகஸ்ட் 5ம் பிளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வருகின்றது. 120 Hz Refresh Rate, 6.79-இன்ச் டச் டிஸ்ப்ளேவுடன் 1080x2400 பிக்சல்கள் (FHD+) தெளிவுத்திறனை வழங்குகிறது இந்த புதிய ஸ்மார்ட் போன். டிஸ்பிலே பாதுகாப்பை பொறுத்தவரை "கார்னிங் கொரில்லா கிளாஸ் 3" பாதுகாப்பு உள்ளது.
Poco M6 Plus 5G ஆனது octa-core Qualcomm Snapdragon 4 Gen 2 AE மூலம் இயக்கப்படுகிறது. மேலும் இது 6ஜிபி RAM மற்றும் 8ஜிபி RAM மறுபாடுகளில் விற்பனைக்கு கிடைக்கிறது. Poco M6 Plus 5G ஆனது Android 14ல் இயங்குகிறது மற்றும் 5030mAh பேட்டரி மூலம் இயக்கப்படுகிறது. மேலும் Poco M6 Plus 5G ஆனது 33W ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்கிறது.
undefined
உங்கள் வீட்டுக்கு தேவையான பொருட்கள்.. இப்போது சலுகை விலையில்.. அமேசானில் மிஸ் பண்ணக்கூடாத டீல்கள்!
கேமராக்களைப் பொறுத்தவரை, பின்புறத்தில் 108 மெகாபிக்சல் முதன்மை கேமரா மற்றும் 2 மெகாபிக்சல் கேமராவைக் கொண்ட இரட்டை கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது Poco M6 Plus. அதே போல செல்ஃபிக்களுக்கான ஒற்றை முன்புற கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது, அதில் 13 மெகாபிக்சல் சென்சார் பொருத்தப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு 14ஐ அடிப்படையாகக் கொண்ட இந்த போனில் மைக்ரோ எஸ்டி கார்டு வழியாக (1TB வரை) விரிவாக்கக்கூடிய அம்சமும் உள்ளது. Poco M6 Plus 5G என்பது டூயல் சிம் (ஜிஎஸ்எம் மற்றும் ஜிஎஸ்எம்) மொபைலாகும், இது இரட்டை நானோ சிம் மற்றும் நானோ சிம் கார்டுகளை ஏற்கும். ஆகஸ்ட் 5ம் தேதி முதல் கிராஃபைட் பிளாக், ஐஸ் சில்வர் மற்றும் மிஸ்டி லாவெண்டர் வண்ணங்களில் இது கிடைக்கும். இதன் பேசிக் மாடலின் விலை 11,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய மொபைல் வாங்க போறீங்களா.. வெயிட் பண்ணுங்க பாஸ்.. அமேசானில் மொபைல் ஆஃபர் வந்தாச்சு!