புத்தம்புது கலர்.. இந்தியாவில் வெளியாகும் OnePlus 12 Glacial White - விலை என்ன? ஸ்பெக்கில் மாற்றம் இருக்குமா?

By Ansgar R  |  First Published Jun 3, 2024, 8:01 PM IST

OnePlus 12 Mobile : இந்தியாவில் வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனது OnePlus 12 கைபேசியின் புதிய வண்ண விருப்பத்தை இப்பொது இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது OnePlus.


OnePlus நிறுவனம் தனது OnePlus 12 Glacial White கலர் மாடலை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. Glacial White என்ற அந்த மாறுபாட்டை இப்போது OnePlus India இணையதளத்தில் பார்க்கலாம். இந்த கைபேசி கடந்த ஜனவரி மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது மற்றும் ஃப்ளோவி எமரால்டு மற்றும் சில்க்கி பிளாக் வண்ண விருப்பங்களில் ஏற்கனவே இது கிடைக்கிறது. 

மேலும் புதிதாக வெளியாகவுள்ள இந்த Glacial White என்ற வண்ண விருப்பம் கொண்ட OnePlus 12 மொபைல் ஏற்கனவே இரு வண்ணக்களில் இந்தியாவில் வெளியான அதே OnePlus 12 மொபைலின் விவரக்குறிப்புகளுடன் வரும். மற்றும் 12 ஜிபி RAM மற்றும் 256 GB ROM என்ற ஒரே மாடலில் விற்பனையாகும். இது ஸ்னாப்டிராகன் 8 ஜெனரல் 3 சிப்செட்டைக் கொண்டிருக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

Oppo : இந்தியாவின் முதல் IP69 ரேட்டிங் கொண்ட போன்? அறிமுகமாகும் Oppoவின் F27 சீரிஸ் - இணையத்தில் கசிந்த தகவல்!

இந்த ஸ்மார்ட்போன் ஒரே 12ஜிபி RAM மற்றும் 256ஜிபி ROM மாடலில் வெளியாகவுள்ள நிலையில், இதன் விலை ரூ. 64,999 என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த OnePlus 12 Glacial White வண்ண விருப்பம் Amazon, நிறுவனத்தின் இணையதளம், OnePlus Experience கடைகள் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள அதிகாரப்பூர்வ பார்ட்னர் ஸ்டோர்களில் கிடைக்கும். இந்த கைபேசி ஜூன் 6 முதல் விற்பனைக்கு வருகிறது.

நிறுவனத்தின் வலைத்தளத்தின் அறிவிப்பின்படி, இந்த ஸ்மார்ட்போனின் விவரக்குறிப்புகள் ஏற்கனவே வெளியான நிலையான மாடலைப் போலவே இருக்கும். OnePlus 12 Glacial White colourway ஆனது 6.82-inch quad-HD+ (1,440 x 3,168 pixels) LTPO 4.0 AMOLED திரையை 1Hz மற்றும் 120Hz இடையே அடாப்டிவ் ரெஃப்ரெஷ் ரேட் மற்றும் 4,50 nits உச்ச பிரகாசத்துடன் கொண்டிருக்கும்.

OnePlus 12 Glacial White கலர் ஆப்ஷனில் Qualcomm's Snapdragon 8 Gen 3 SoC உடன் 12GB LPDDR5x ரேம் மற்றும் 256GB UFS 4.0 இன்பில்ட் ஸ்டோரேஜ் உடன் இணைக்கப்பட்டுள்ளது. ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான OxygenOS 14ல் இயங்குகிறது. சோனி LYT-808 சென்சார், 48 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா மற்றும் 3x ஆப்டிகல் ஜூம் கொண்ட 64 மெகாபிக்சல் பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸுடன் 50 மெகாபிக்சல் பிரைமரி ஷூட்டர் கொண்ட டிரிபிள் ரியர் கேமரா அமைப்பைக் இது கொண்டுள்ளது. 

எல்லாரும் எதிர்பார்த்த தேதி சொல்லிட்டாங்க.. Realme GT 6 வெளியாக போகுது.. ரிலீஸ் தேதி குறிச்சாச்சு..

click me!