Nothing 2A : இந்திய சந்தைக்கு மட்டும் ஒரு ஸ்பெஷல் போன்.. அறிமுகமாகும் Nothing 2A ஸ்பெஷல் எடிஷன் - விலை என்ன?

By Ansgar RFirst Published Apr 29, 2024, 10:51 AM IST
Highlights

Nothing 2A India Special Edition : இந்திய சந்தையில் கடந்த சில ஆண்டுகளில் பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ள Nothing போன் தனது special எடிஷன் போன் ஒன்றை இந்திய சந்தையில் வெளியாகவுள்ளது.

இந்த ஆண்டு மார்ச் மாதத்தில், நத்திங் ஃபோன் (2a) அதன் மிகவும் மலிவு விலையில் ஸ்மார்ட்ஃபோனை அறிமுகப்படுத்திய பிறகு, இப்பொது நத்திங் போனின் இந்தியாவிற்கான ஸ்பெஷல் எடிஷனை அறிமுகப்படுத்துகிறது. இந்த புதிய நத்திங் ஃபோன் (2a) ஏப்ரல் 29ம் (இன்று) தேதி மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என்று தெரிவிக்கிறது.

இவ்வாண்டு மார்ச் மாதத்தில் Nothing ஃபோன் (2a) அறிமுகப்படுத்தப்பட்ட வெகு சில காலத்திற்கு பிறகு சிறிது நேரத்துக்குப் பிறகு, இந்த ஸ்பெஷல் எடிஷன் இந்தியாவில் அறிமுகமாகிறது. நத்திங் நிறுவனத்தின் இணை நிறுவனர் கார்ல் பெய் சமீபத்தில் Xல் ஒரு ட்வீட் ஒன்றை வெளியிட்டார், அதில் 400க்கும் மேற்பட்ட ஆர்டர் கிடைத்ததாகவும் கூறியுள்ளார். 

Oppo Phone : தரமான ஸ்பெக்ஸ்.. உலக சந்தையில் அறிமுகமான Oppo A60.. இந்தியாவில் விற்பனைக்கு வருமா? விலை என்ன?

நத்திங் ஃபோன் (2a) மூன்று வகைகளில் வருகிறது 8GB RAM + 128GB ROM, 8GB RAM + 256GB ROM, மற்றும் 12GB RAM + 256GB ROM. இவற்றின் விலை முறையே ரூ.23,999, ரூ.25,999 மற்றும் ரூ.27,999 ஆகும். இந்த போன் Flipkart, Croma மற்றும் பிற முன்னணி சில்லறை விற்பனை நிலையங்களில் விற்பனை செய்யப்படுகிறது. இன்று மதியம் முதல் அது விற்பனைக்கு வருகின்றது.

We received over 400 entries in the first design stage for the Community Edition! It's inspiring to see such creativity in our community. Plus, some entries are actually close to the upcoming variant colors we've been working on for over 6 months. 😅 But as a sign of recognition,… https://t.co/mm6xehIuMF

— Carl Pei (@getpeid)

Nothing 2A ஸ்பெக்ஸ் 

அதன் டிஸ்ப்ளே : 6.7-இன்ச் OLED 120Hz டிஸ்ப்ளே, 1,600 nits உச்ச பிரகாசம் மற்றும் Qualcomm Snapdragon 8+ Gen 1 SoC கொண்டு இயங்குகிறது. பின்புற கேமராக்கள் 50MP+50MP ஷூட்டர்கள் கொண்டுள்ளது. மேலும் செல்ஃபி கேமரா முன்பக்கத்தில் 32எம்பி கொண்டிருக்கும். ரேம் மற்றும் சேமிப்பு 8ஜிபி+128ஜிபி, 12ஜிபி+256ஜிபி மற்றும் 12ஜிபி+512ஜிபி ஆகிய வடிவிலும் ஆண்ட்ராய்டு 14-அடிப்படையிலான இந்த நத்திங் 4,700mAh 45W ஃபாஸ்ட் சார்ஜிங் (வயர்டு) மற்றும் 15W வயர்லெஸ் சார்ஜிங் முறைகளில் வருகின்றது. 

ரூ.20 ஆயிரம் கூட இல்லைங்க.. விலை குறைவு தான்.. தரமான டாப் 5 சிறந்த 5ஜி ஸ்மார்ட்போன்கள் இவை..

click me!