மைக்ரோசாப்ட் முடங்கியதன் காரணமாக சென்னையைத் தொடர்ந்து மதுரை மற்றும் திருச்சியில் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
உலகம் முழுவதும் விண்டோஸ் தளம் முடங்கி உள்ளதால் பல்வேறு சேவை துறைகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில் விமான சேவையும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன்படி சென்னையில் இருந்து இன்று மாலை 5 மணிக்கு மேல் புறப்படும் பெரும்பாலான விமானங்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சென்னயைில் இருந்து 4 மணி வரை விமானங்கள் தாமதமாக புறப்பட்டன. மைக்ரோசாஃப்ட் கோளாறு காரணமாக சென்னையில் விமானங்கள் ரத்து செய்யப்படுவதால் பயணிகள் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. மைக்ரோசாஃப்ட் கோளாறு காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
undefined
பெற்றோருக்கு வந்த சிறுமியின் புகைப்படம்; அலறி துடித்த பெற்றோர் - சென்னையில் பரபரப்பு
மேலும் இன்று மாலை அல்லது நாளை மாற்று விமானம் வழங்கப்படும் அல்லது பயணக் கட்டணம் திருப்பி தரப்படும் எனவும் தகவல் வெளியாகி உள்ளது. மதுரை விமான நிலையத்திலும் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் போர்டிங் பாஸ்கள் கணினி முறையில் இல்லாமல் கையால் எழுதி கொடுக்கப்படுகிறது.
ஆடி முதல் வெள்ளி; சமயபுரத்தில் நீண்ட வரிசையில் நின்று அம்மனை மனம் உருகி வழிபடும் பக்தர்கள்
அதே போன்று திருச்சியில் இருந்து இன்று இரவு 7 மணி மற்றும் 8.45 மணிக்கு பெங்களூரு புறப்பட வேண்டிய இண்டிகோ விமானம் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதேபோல, இன்று மாலை, 6.30 மணி மற்றும் இரவு, 8 மணிக்கு, பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு வரவேண்டிய இண்டிகோ விமான சேவைகளும் ரத்து செய்யப்பட்டுள்ளன.