செல்போன் பேட்டரியை காலி செய்யும் த்ரெட்ஸ் ஆப்: என்ன செய்ய வேண்டும்?

By Manikanda PrabuFirst Published Jul 14, 2023, 1:13 PM IST
Highlights

மெட்டா நிறுவனத்தின் புதிய செயலியான த்ரெட்ஸ் செல்போனின் பேட்டரியை சீக்கிரம் தீர்த்து விடுவதாக பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர்

இன்ஸ்டாகிராம் வாயிலாக ட்விட்டர் போன்ற ஒரு தளத்தை அறிமுகப்படுத்த உள்ளதாக ஃபேஸ்புக் நிறுவனத்தின் தாய் நிறுவனமான மெட்டா நிறுவனம் அறிவித்தது. அதன்படி, த்ரெட்ஸ் என பெயரிடப்பட்ட அந்த செயலி கடந்த 6ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்டது.

இன்ஸ்டாகிராமில் கணக்கு வைத்திருப்பவர்கள் அதனுடைய பயனர் விவரங்களை கொண்டே த்ரெட்ஸ் செயலியில் உள்நுழையலாம். இதற்காக தனி கணக்கு தொடங்க தேவையில்லை. இந்த த்ரெட்ஸ் செயலியை பல மில்லியன் பயனர்கள் டவுன்லோடு செய்து அதில் கணக்கு தொடங்கியுள்ளனர்.

Latest Videos

மெட்டா நிறுவனத்தின் த்ரெட்ஸ் செயலி ட்விட்டருக்கு மிகப்பெரிய சவாலாக இருக்கும் என கூறப்படும் நிலையில், த்ரெட்ஸ் செயலி செல்போனின் பேட்டரியை சீக்கிரம் தீர்த்து விடுவதாக பயனர்கள் புகார் அளித்து வருகின்றனர். இதனால், பலரும் அந்த செயலியை அன் - இன்ஸ்டால் செய்யப்போவதாகவும் கூறி வருகின்றனர்.

இருப்பினும், குறுப்பிட்ட சில iPhone/iPad மாடல்கள் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் மட்டுமே பேட்டரி சீக்கிரம் தீர்ந்து விடுவதாக தெரிகிறது. இதுகுறித்து மெட்டா நிறுவனம் கூறுகையில், அந்த பிரச்சினை சரி செய்யப்பட்டு விட்டதாக விளக்கம் அளித்துள்ளது. ஆனால், பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுதற்கான காரணம் தெரியவில்லை எனவும் அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

Chandrayaan 3: நிலவின் தென்துருவத்தில் என்ன இருக்கிறது? ஏன் இஸ்ரோ அதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது?

பேட்டரி சீக்கிரம் தீர்ந்துவிடுவதற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என்றாலும், மெட்டா பயன்பாடுகள் ஐபோன் பேட்டரியை சீக்கிரம் தீர்த்து விடுவதாக நீண்டகாலமாகவே குற்றம் சாட்டப்படுகிறது என சைபர் செக்யூரிட்டி நிபுணர் ஜேக் மூரே தெரிவித்துள்ளார். “மெட்டா நிறுவனம் தங்கள் பயன்பாட்டைப் பற்றியும், பயனர்கள் அதனுடன் எவ்வாறு தொடர்பு கொள்கிறார்கள் என்பதைப் பற்றியும் மேலும் புரிந்துகொள்ள முயற்சிப்பதால் இதுபோன்று ஆக வாய்ப்புள்ளது.” எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நெகட்டிவ் டெஸ்டிங் எனப்படும் ஒரு செயல்முறையானது, மக்கள் எவ்வாறு தங்களது செயலியை பயன்படுத்துகிறார்கள் என்பதை தெரிந்து கொண்டு, அதன் பயன்பாட்டை மேலும் மேம்படுத்த டெவலப்பர்களுக்கு உதவுகிறது. இதனை பயன்படுத்த கடந்த காலங்களில் ஃபேஸ்புக் நினைத்தது எனவும் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

நீங்கள் என்ன செய்ய வேண்டும்?


** த்ரெட்ஸ் ஆப் உங்கள் பேட்டரியை காலி செய்வதாக நீங்கள் நினைத்தால், அதனை சரிசெய்ய சில விஷயங்களை செய்யலாம்.

** அதன்படி, த்ரெட்ஸ் பயனர்கள் தங்கள் ஃபோன்களில் Background App Refresh-யை ஆஃப் செய்யலாம்.

** iOS சாதனங்களில், செட்டிங்ஸ் அமைப்பை ஓப்பன் செய்து, அதில், General-யை க்ளிக் செய்யவும். பின்னர், Background App Refresh ஆப்ஷனை ஆஃப் செய்யவும்.

** ஆண்ட்ராய்டு சாதனங்களில், செட்டிங்ஸ் அமைப்பை ஓப்பன் செய்து Connections என்பதை க்ளிக் செய்யவும். பின்னர் Data Usage-யை க்ளிக் செய்யவும். அதன்பிறகு, மொபைல் டேட்டாவை க்ளிக் செய்து, த்ரெட்ஸ் பயன்பாட்டைக் கண்டறியவும். அதில், Allow background data usage ஆப்ஷனை ஆஃப் செய்யவும்.

click me!