
வாட்ஸ்அப்பின் தாய் நிறுவனமான மெட்டா, சில நாட்களுக்கு முன்பு தனது அனைத்து தயாரிப்புகளிலும் AI அம்சங்களைக் கிடைக்கச் செய்துள்ளது. இதன் மூலம் பேஸ்புக், இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப்பில் இப்போது AI சாட்பாட்டை அறிமுகம் செய்துள்ளது.
இருப்பினும், இந்த சாட்பாட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பது பலருக்குத் தெரியாது. Open AI நிறுவனத்தின் பிரபல சாட்போட், சாட்ஜிபிடி (ChatGPT) அறிமுகப்படுத்தப்பட சில மாதங்களில், மற்ற நிறுவனங்களும் அதே போன்ற சாட்பாட்டை உருவாக்க களத்தில் குதித்துள்ளன.
பல சாட்பாட்கள் செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தி பயனர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதிலளிக்கின்றன. மெட்டா நிறுவனதிதன் AI சாட்பாட்டும் இதே வழியில் செயல்படுகிறது. மெட்டா AI ல் பயனர் கேள்வி கேட்கும் வரை எதுவும் செய்யாது.
Meta AI ஐப் பயன்படுத்த, முதலில் செயற்கை நுண்ணறிவு வசதிகளைப் பயன்படுத்த வாட்ஸ்அப்க்கு அனுமதி வழங்க வேண்டும். அதன் பிறகுதான் வாட்ஸ்அப்பில் மெட்டா AI பயன்பாட்டுக்கு வரும். வாட்ஸ்அப்பை ஓபன் செய்தவுடன் வரும் வட்ட வடிவ ஐகானை கிளிக் செய்தால் மெட்டா AI சாட்பாட் திறக்கும்.
Meta AI அனைத்து பயனர்களுக்கும் படிப்படியாக வெளியிடப்படுகிறது. இதுவரை இந்த அம்சம் இல்லை என்றால், வாட்ஸ்அப்பை லேட்டஸ்டு வெர்ஷனுக்கு அப்டேட் செய்து பார்க்கவும். அப்போதும் வாட்ஸ்அப்பில் Meta AI வசதி வரவில்லை என்றால் கொஞ்ச காலம் காத்திருக்க வேண்டியதுதான்.
சிலருக்கு இந்த அம்சம் பிடிக்காமல் இருக்கலாம். அவர்கள் மெட்டா AI ஐ disable செய்ய எந்த வழியும் இல்லை. ஆனால் Mute செய்யலாம். புரொஃபைலை பிளாக் செய்தும் அதன் செயல்பாட்டைத் தவிர்க்கலாம்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.