அட! ரூ.198க்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா; ஜியோவின் 'சூப்பர்' பட்ஜெட் பிளான்களின் லிஸ்ட்!

By Rayar r  |  First Published Dec 28, 2024, 10:45 AM IST

ஜியோ ரூ.198க்கு அன்லிமிடெட் 5ஜி டேட்டா வழங்கும் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டங்கள் குறித்த முழு விவரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம். 


இந்தியாவில் ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்களும், அரசு நிறுவனமான பிஎஸ்என்எல்லும் தொலைத்தொடர்பு சேவையை வழங்கி வருகின்றன. ஜியோ, ஏர்டெல், வோடோபோன் ஐடியா ஆகிய நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தியதால் ஏராளமான வாடிக்கையாளர்கள் பிஎஸ்என்எல் பக்கம் திரும்பி வருகின்றனர்.

இதனால் தனியார் தொலைத்தொடர்பு நிறுவனங்கள் போட்டி போட்டு குறைந்த விலை ரீசார்ஜ் திட்டங்களை அறிவித்து வருகின்றன. அந்த வகையில் ஜியோ நிறுவனம் ரூ.198 விலை கொண்ட பிளானை செயல்படுத்தி வருகிறது. இந்த பிளானை நீங்கள் ரீசார்ஜ் செய்தால் தினமும் 2ஜிபி டேட்டா கிடைக்கும். மேலும் அன்லிமிடெட் கால் வசதி, தினமும் 100 எஸ்எம்எஸ் வசதிகளும் கிடைக்கும்.

Tap to resize

Latest Videos

undefined

இந்த ரீசார்ஜ் திட்டத்துடன் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தாவை பெற முடியும். மிக முக்கியமாக இந்த திட்டத்தில் 5ஜி அன்லிமிடெட் டேடா வழங்கப்படுகிறது. உங்கள் கையில் 5ஜி ஸ்மார்ட்போன் இருந்தால் அன்லிமிடெட் 5ஜி டேட்டாவை நீங்கள் பயன்படுத்திக் கொள்ள முடியும். இந்த பிளானின் வேலிட்டி மொத்தம் 14 நாட்கள் ஆகும்.

இதேபோல் ரூ.199 விலையுள்ள ரீசார்ஜ் திட்டத்தையும் ஜியோ செயல்படுத்தி வருகிறது. இந்த திட்டத்தின் வேலிடிட்டி 18 நாட்களாகும். தினமும் 1.5 ஜிபி டேட்டா வழங்கப்படும். தினசரி 100 எஸ்எம்எஸ் கட்டணமின்றி அனுப்பிக் கொள்ள முடியும். மேலும் அன்லிமிடெட் கால் வசதியும் இருக்கிறது. இந்த திட்டத்திலும் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தாவை பெற்றுக் கொள்ள முடியும்.

மேலும் ரூ.399 என்ற ரீசார்ஜ் திட்டத்தையும் ஜியோ கொண்டு வந்துள்ளது. இந்த பிளான்படி தினமும் 2.5ஜிபி டேட்டா மொத்தமாக 70 ஜிபி டேட்டா கிடைக்கும். இது தவிர அன்லிமிடெட் கால் வசதி,  தினசரி 100 எஸ்எம்எஸ் ஆகிய சலுகைகளும் உண்டு அத்துடன் JioTV, JioCinema மற்றும் JioCloudக்கான சந்தாவையும் பெற்றுக் கொள்ளலாம்.

இது தவிர ஜியோவின் ரூ.349 விலை கொண்ட ரீசார்ஜ் திட்டம் தினமும் 2ஜிபி டேட்டா என மொத்தமாக 5ஜிபி டேட்டா கிடைக்கும். அன்லிமிடெட் கால் வசதி,  தினசரி 100 எஸ்எம்எஸ் வசதியும் உண்டு. வேலிடிட்டி 28 நாட்களாகும்.
 

click me!