
பிரதமர் நரேந்திர மோடியின் லட்சியத் திட்டமான 'மேக் இன் இந்தியா' (Make in India) முயற்சியில் இந்தியா மிக முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. 2025-ம் ஆண்டில் மட்டும் இந்தியா ரூ. 4.51 லட்சம் கோடி மதிப்பிலான ஆப்பிள் ஐபோன்களை (Apple iPhones) ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளதாக மத்திய அமைச்சர்கள் தெரிவித்துள்ளனர்.
கடந்த 11 ஆண்டுகளில் இந்தியாவின் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி 6 மடங்கும், எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி 8 மடங்கும் அதிகரித்துள்ளதாக மத்திய எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் திங்கள்கிழமை அறிவித்தார். இது குறித்து அவர் எக்ஸ் (X) தளத்தில் வெளியிட்ட பதிவில், "பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்திலும், உற்பத்தியாளர் பொருளாதாரமாக மாறுவதற்கான நமது பயணத்திலும் இது ஒரு முக்கிய மைல்கல்" என்று குறிப்பிட்டுள்ளார்.
2025-ல் ஆப்பிள் நிறுவனம் ரூ. 4.51 லட்சம் கோடி மதிப்பிலான மொபைல் போன்களை ஏற்றுமதி செய்துள்ளது. அதேவேளையில், 2021-2025 நிதியாண்டுக் காலத்தில் சாம்சங் நிறுவனம் ரூ. 1.5 லட்சம் கோடி மதிப்பிலான போன்களை ஏற்றுமதி செய்துள்ளதாக அஸ்வினி வைஷ்ணவ் சுட்டிக்காட்டினார்.
மறுபுறம் விவசாயத் துறையிலும் இந்தியா புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. 15 கோடி டன் அரிசியை உற்பத்தி செய்து, சீனாவை விஞ்சி உலகின் மிகப்பெரிய அரிசி உற்பத்தியாளராக இந்தியா உருவெடுத்துள்ளதாக மத்திய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
இந்திய வேளாண் ஆராய்ச்சி கவுன்சிலின் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் சவுகான், "சீனா 14 கோடி டன் அரிசியை உற்பத்தி செய்த நிலையில், இந்தியா 15 கோடி டன்களை உற்பத்தி செய்து முதலிடத்தைப் பிடித்துள்ளது. இதன் விளைவாக, இந்தியா இப்போது வெளிநாட்டுச் சந்தைகளுக்கும் அரிசியை விநியோகித்து வருகிறது" என்று பெருமிதத்துடன் கூறினார்.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.