
சீனாவின் பிரபலமான லார்ஜ் லாங்குவேஜ் மாடலான டீப்ஸீக் புதிய மாற்றத்துடன் அறிமுகமாகியுள்ளது. அரசியல் ரீதியாக சர்ச்சைக்குரிய விவாதங்களைத் தடுக்கும் திறனுடன் உருவாக்கப்பட்ட டீப்ஸீக்-ஆர்1-சேஃப் (DeepSeek-R1-Safe) மாடல் தற்போது சோதனை கட்டங்களை வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இதன் முக்கிய சிறப்பம்சம் என்னவென்றால் இந்த மாடலை உருவாக்கியது டீப்ஸீக் நிறுவனம் அல்ல. சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஹுவாவே, ஜெஜியாங் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து இதை உருவாக்கியுள்ளது. டீப்ஸீக் நிறுவனரும், நிறுவனம் தானும் நேரடியாக ஈடுபடவில்லை என்பதையும் ஹுவாவே விளக்கியுள்ளது.
ஹுவாவே தனது 1,000 அசென்ட் AI சிப்களை பயன்படுத்தி, ஓப்பன் சோர்ஸ் டீப்ஸீக்-ஆர்1 மாடலை மீண்டும் பயிற்றுவித்துள்ளது. செயல்திறனில் பெரிய குறைவு இல்லாமல், பாதுகாப்பு கட்டுப்பாடுகளை வலுப்படுத்துவதே அவர்களின் முதன்மை நோக்கமாக இருந்தது.
இந்த புதிய AI ஆனது அரசியல் விவாதங்கள், நச்சு மொழி, சட்டவிரோத நடவடிக்கைகளுக்கான தூண்டுதல்கள் போன்ற சர்ச்சைக்குரிய உள்ளடக்கங்களைத் தடுக்கிறது. அதாவது, ஆன்லைன் உரையாடல்களில் தீங்கு விளைவிக்கும் பகுதிகளை பில்டர் செய்யும்.
பெய்ஜிங்கின் கடுமையான ஒழுங்குமுறை விதிகளுக்கேற்ப, AI தயாரிப்புகள் சமூகம் சார்ந்த நடுநிலையான ஜனநாயகத்தை பிரதிபலிக்க வேண்டும் என்பதால், இந்த மாடல் முழுமையாக அந்தத் திசையில் மாற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் சீனாவின் இணைய பாதுகாப்பு நடைமுறைகளும் மேலும் வலுப்படுத்தப்படுகின்றன.
ஹுவாவே தகவல்படி, சோதனைக்கட்டங்களில் இந்த மாடல் 100% வரை வெற்றிகரமாக சர்ச்சைக்குரிய பதில்களைத் தடுத்துள்ளது. ஆனால், சிக்கலான சூழ்நிலை கேள்விகள் அல்லது மறைக்கப்பட்ட தூண்டுதல்களில் வெற்றி விகிதம் 40% ஆகக் குறைந்தது. இருப்பினும், மொத்த மதிப்பீட்டில் 83% பாதுகாப்பு மதிப்பெண்கள் கிடைத்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.