Whatsapp Account : ஒரே டிவைஸில் இரு வாட்ஸ்அப் கணக்கை பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக காணலாம்.
கண் விழிக்கும் நேரம் முதல் உறங்கச் செல்லும் நேரம் வரை ஒரு மனிதன் தனது ஃபோனில் அதிகம் பயன்படுத்தும் செயலிகளில் முக்கியமானது whatsapp. இணைய இணைப்பு இருந்தால் போதும் மெசேஜ்கள் தொடங்கி பண பரிவர்த்தனை வரை அனைத்து விஷயங்களையும் நம்மால் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி செய்துகொள்ள முடியும் என்பது அனைவரும் அறிந்ததே.
அதே நேரத்தில் தொடர்ச்சியாக பல அப்டேட்டுகளை whatsapp நிறுவனம் வழங்கிக் கொண்டே வருகிறது. பணம் செலுத்துதல், ஸ்கிரீன் ஷேரிங் மற்றும் ஒன்றுக்கும் மேற்பட்ட கணக்குகளை ஒரே செல்போனில் இருந்து உருவாக்கிக்கொள்ளும் வசதி என்று பல புதிய அம்சங்களை தொடர்ச்சியாக whatsapp நிறுவனம் வெளியிட்ட வண்ணம் இருக்கின்றது.
புதிய அப்டேட்
அந்த வகையில் முன்பெல்லாம் அலுவலகத்திற்கும், தங்களது சொந்த பயன்பாட்டிற்கும் வாட்ஸ்அப்பை பயன்படுத்தி வந்த மக்கள், இரு தனி தனி சிம்கார்டுகள் இருந்தால் மட்டுமே இரு வேறு கணக்குகளை பயன்படுத்த முடியும். சில நேரங்களில் இதற்காகவே இரண்டு செல்போன்களோடு மக்கள் வலம் வந்து கொண்டிருந்தது அனைவரும் அறிந்ததே.
இந்நிலையில் ஒரே வாட்ஸ்அப்பில் இரு கணக்குகளை உருவாக்கும் வசதியை இந்த 2024 ஆம் ஆண்டில் whatsapp நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. அலுவலகம் மற்றும் சொந்த பயன்பாடு என்று இரண்டிற்கும் ஒரே ஃபோனில் ஒரே வாட்ஸ்அப்பில் பயன்படுத்தும் இந்த அம்சமானது பலருக்கும் ஒரு வரப்பிரசாதமாகவே அமைந்திருக்கிறது.
இந்த வசதியை பயன்படுத்த முதலில் உங்களுடைய whatsapp அப்டேட் செய்யப்பட்டிருக்க வேண்டும். அதன்பிறகு whatsappக்குள் சென்று வலது பக்க மேல் முனையில் உள்ள அந்த மூன்று புள்ளியை தொடும்பொழுது அதில் உங்கள் சுயவிவர பக்கத்தை உங்களால் பார்க்க முடியும். அதில் Accounts என்ற பக்கத்திற்கு சென்று அங்கு "ஆட் அக்கவுண்ட்" என்று காண்பிக்கப்படும் அந்த இடத்தில் நீங்கள் லாகின் செய்து ஒரே நேரத்தில் உங்களால் இரண்டு கணக்குகளை பயன்படுத்திக்கொள்ள முடியும்.
ஒரே செல்போனில் ஒரே எண்ணில் இரண்டுக்கும் மேற்பட்ட கணக்குகளை உங்களால் இனி எளிமையாக இந்த முறையில் பயன்படுத்திக்கொள்ள முடியும்.
நீங்கள் படுத்துக் கொண்டு போன் யூஸ் பண்றிங்களா..? இந்த ஆபத்துகள் வரலாம் ஜாக்கிரதை!