அட இவ்ளோ தானா! இனி Amazon Pay Balance-ஐ உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம்!!

By Dinesh TG  |  First Published Nov 13, 2022, 2:08 AM IST

உங்கள் அமேசான் பே பேலன்ஸை உங்கள் வங்கிக் கணக்கிற்கு எளிதாக மாற்றலாம். அவ்வாறு மாற்றுவது எப்படி என்பது குறித்து இங்குக் காணலாம்.


தீபாவளி பரிசாக அமேசான் கிஃப்ட் கார்டை பெற்றீர்களா? அதிலுள்ள பணத்தை, உங்கள் Amazon Pay வாலட்டிலும் சேர்த்தீர்களா? அடுத்து, அதை எவ்வாறு பயன்படுத்துவது என்பதை நீங்கள் தான் தீர்மானிக்க வேண்டும். அமேசான் பே பேலன்ஸில் உள்ள பணத்தை, அமேசானில் ஷாப்பிங் செய்து மட்டும் தான் பயன்படுத்த முடியுமா? வேறு வழியே இல்லையா? என பலருக்கு இந்த வருத்தம் இருக்கலாம். 

இனி வருத்தப்பட வேண்டாம். உங்கள் அமேசான் பே வாலட்டில் இருந்து உங்கள் வங்கிக் கணக்கிற்கு பணத்தை மாற்றலாம். அதற்கு இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினாலே போதும். 

Latest Videos

undefined

ஆனால் அவ்வாறு தொடர்வதற்கு முன், நீங்கள் முழு KYC ஐ முடித்திருந்தால் மட்டுமே இந்த அம்சத்தை பயன்படுத்த முடியும். Amazon KYC சரிபார்ப்பு செய்வது என்பது இலவசமானது, இதற்கு எந்த கட்டணமும் தேவையில்லை. எனவே, பின்வரும் வழிமுறைகளைப் பின்பற்றி, அமேசானில் KYC நிறைவு செய்யவும்

Amazon KYC சரிபார்ப்பு நிறைவு செய்யும் முறை:

  • - உங்கள் அமேசான் செயலியில் KYC மெனுவைத் திறந்து, மேனேஜ் என்பதன் கீழ் KYC கிளிக் செய்யவும்
  • - அடுத்து, ஒரு செல்ஃபி போட்டோ மற்றும் உங்கள் ஆவணத்தை போட்டோ எடுத்து பதிவேற்றவும்
  • - உங்கள் ஆதார் அட்டையை வழங்கவும்
  • - அடுத்து, Amazon ஏஜேன்ட் வீடியோ கால் மூலம் உங்கள் சரிபார்ப்பை நிறைவு செய்யலாம்.

டுவிட்டருக்குப் போட்டியாக முன்னேறி வரும் Koo செயலி! புதிய வசதிகள் அறிமுகம்!!

இவ்வாறு KYC முடிந்ததும், நீங்கள் உங்கள் Amazon Pay பேலன்ஸை வங்கிக் கணக்கிற்கு மாற்றலாம். அதற்கான வழிமுறை:

  1. படி 1- உங்கள் மொபைலில் Amazon செயலியைத் திறக்கவும்
  2. படி 2- செயலியின் முகப்புப் பக்கத்தில் இருக்கும் ஐகானைக் கிளிக் செய்து, Amazon Pay மெனுவுக்குச் செல்லவும். 
  3. படி 3- Send Money என்பதைக் கிளிக் செய்யவும்
  4. படி 4- அடுத்து, 'To Bank' என்பதைத் தேர்ந்தெடுக்கவும்
  5. படி 5- IFSC குறியீடு, கணக்கு எண் மற்றும் கணக்கு வைத்திருப்பவரின் பெயர் போன்ற விவரங்களை நிரப்பவும். பின்னர், Pay Now என்பதைத் தட்டவும்
  6. படி 6- அடுத்து, நீங்கள் எவ்வளவு ரூபாய் மாற்ற வேண்டும் என்பதை உள்ளிட்டு, Continue என்பதைத் தட்டவும்
  7. படி 7- இப்போது பேமெண்ட் முறை உங்களுக்குக் காட்டப்படும். அதில் Show more ways என்பதைத் தேர்ந்தெடுத்து, Amazon Pay balance என்பதைக் கிளிக் செய்யவும்.
  8. படி 8 - இப்போது, Continue என்பதைக் கிளிக் செய்யவும்.

 இதற்குப் பிறகு உங்கள் அமேசான் பே பேலன்ஸ் உங்கள் வங்கிக் கணக்கிற்கு மாற்றப்படும்.
 

click me!