பல சாதனங்களில் பல வகையான கேபிள்களை பயன்படுத்துவதால் உருவாகும் மின்-கழிவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தபின், பயனர்கள் தங்கள் எல்லா சாதனங்களையும் ஒரே கேபிள் மூலம் சார்ஜ் செய்ய முடியும் நிலை உருவாகும்.
இந்தியாவில் விற்கப்படும் ஸ்மார்ட்போன்களுக்கு ஒரே மாதிரியான சார்ஜிங் கனெக்டர் பயன்படுத்துவது குறித்து மத்திய அரசு நெறிமுறைகளை அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகினது. யூஎஸ்பி டைப் சி (USB Type-C) போர்ட்டை எல்லா மொபைல் போன்களிலும் பயன்படுத்த அறிவுறுத்தப்படலாம் என்று தெரிகிறது.
2022 இல் ஐரோப்பிய ஒன்றியம் (EU) வழங்கியதைப் போன்ற இந்தியாவும் ஆணையை பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயனர்கள் பல சாதனங்களை சார்ஜ் செய்ய ஒரே கேபிளைப் பயன்படுத்தும் வசதி கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் இந்த நெறிமுறையை அறிவிக்க மத்திய அரசு பரிசீலித்து வருகிறது.
இந்தப் புதிய விதி இந்த ஆண்டு பிற்காலத்தில் அறிவிக்கப்படலாம் என்றும் லேப்டாப்பை சார்ஜ் செய்யவும் டைப்-சி போர்ட்டைப் பயன்படுத்த உத்தரவிடக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் ஸ்மார்ட்போன்கள் மற்றும் டேப்லெட்டுகளில் ஒரே மாதிரியான சார்ஜிங் போர்ட்களை சேர்க்க மொபைல் தயாரிப்பு நிறுவனங்களுக்கு விரைவில் விதிமுறைகள் அறிவிக்கப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த உத்தரவு மொபைல் போன்களுக்கு மட்டுமின்றி, லேப்டாப்களுக்கும் பொருந்துவதாக இருக்கலாம் எனவும் சொல்லப்படுகிறது.
ஆனால் இந்த விதி 2026 முதல் நடைமுறைக்கு வரும் என்று கூறப்படுகிறது. USB Type-C போர்ட் தான் பொது பயன்பாட்டுக்குப் பரிந்துரைக்கப்படும் என்று கணிப்புகள் கூறுகின்றன. ஆனால், இந்த விதிமுறை ஸ்மார்ட்வாட்ச்கள் போன்ற அணியும் சாதனங்களுக்கும் பேசிக் செல்போன்களுக்கும் இருக்காது எனவும் தகவல் அறிந்தவர்கள் சொல்கிறார்கள்.
பல சாதனங்களில் பல வகையான கேபிள்களை பயன்படுத்துவதால் உருவாகும் மின்-கழிவைக் குறைப்பதை நோக்கமாகக் கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது என்றும் கூறப்படுகிறது. இந்த விதிமுறை நடைமுறைக்கு வந்தபின், பயனர்கள் தங்கள் எல்லா சாதனங்களையும் ஒரே கேபிள் மூலம் சார்ஜ் செய்ய முடியும் நிலை உருவாகும்.