கூகுள் “மேட் பை கூகுள்” நிகழ்வை இந்த ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி நடத்துகிறது. இதில் புதிய பிக்சல் 10 தொடர் ஸ்மார்ட்போன்கள், மேம்படுத்தப்பட்ட பிக்சல் வாட்ச் 4, பிக்சல் பட்ஸ் 2a மற்றும் “பிக்சல்ஸ்னாப்” என்ற புதிய ஆக்சசரிகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும் ஜெமினி AI தொழில்நுட்பம் ஒருங்கிணைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பிக்சல் 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள்
பிக்சல் 10 தொடரில் பிக்சல் 10, பிக்சல் 10 புரோ, பிக்சல் 10 புரோ XL மற்றும் மடிக்கக்கூடிய பிக்சல் 10 புரோ ஃபோல்ட் என நான்கு மாடல்கள் உள்ளன. அனைத்து மாடல்களும் TSMC-யின் 3nm தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட டென்சர் G5 பிராசசரை பயன்படுத்தப்படுகிறது. மேம்பட்ட கேமராக்கள் மற்றும் ஜெமினி AI ஒருங்கிணைப்பு சிறப்பு அம்சமாகும்.
கேமரா அம்சங்கள்
பிக்சல் 10 மற்றும் புரோ ஃபோல்ட் மாடல்களில் பிக்சல் 9a கேமராக்கள் பயன்படுத்தப்படலாம். பிக்சல் 10-ல் 5x பெரிஸ்கோப் டெலிஃபோட்டோ லென்ஸ் இருக்கும். புரோ மற்றும் புரோ XL மாடல்களில் 50MP வைட், 48MP அல்ட்ரா-வைட், 48MP டெலிஃபோட்டோ மற்றும் 48MP செல்ஃபி கேமராக்கள் தரத்தை உயர்த்தும்.
வயர்லெஸ் சார்ஜிங்
அனைத்து பிக்சல் 10 மாடல்களும் 25W Qi2 மேக்னாடிக் வயர்லெஸ் சார்ஜிங்கை ஆதரிக்கிறது. புதிய பிக்சல்ஸ்னாப் ஆக்சசரிகளும் இணைக்கப்படுகின்றன.
பிக்சல் வாட்ச் 4
பிக்சல் வாட்ச் 4 வட்ட வடிவில் வரும். சார்ஜிங் முனைகள் பின்புறத்திலிருந்து இடது பக்கம் மாற்றப்பட்டு, “குயிக் சார்ஜ் டாக்” மூலம் சார்ஜிங் வேகம் 25% அதிகரிக்கும். 15 நிமிடங்களில் 50% மற்றும் 30 நிமிடங்களில் 80% சார்ஜ் கிடைக்கும். 41மிமீ மாடல் 30 மணி, 45மிமீ மாடல் 40 மணி பேட்டரி ஆயுள் இருக்கும்.
பிக்சல் பட்ஸ் 2a
பிக்சல் பட்ஸ் 2a-வில் முதல் முறையாக ஆக்டிவ் நாய்ஸ் கேன்சலிங் (ANC) வசதி மற்றும் ஸ்பெஷல் ஆடியோ ஆதரவு இடம்பெற்றுள்ளது. கூகுள் டென்சர் பிராசசர் மூலம் ஸ்மார்ட் சவுண்ட் டியூனிங் வசதி கிடைக்கும்.
பேட்டரி ஆயுள்
பிக்சல் பட்ஸ் 2a கேசிங் ஒரு முறை சார்ஜ் செய்தால் 20 மணி நேரம் பயனாளர்களைச் சேவை செய்கிறது. ANC பயன்படுத்தினால் பேட்டரி ஆயுள் 7 மணி நேரம் இருக்கும். இந்த புதிய பிக்சல் சாதனங்கள் வாடிக்கையாளர்களுக்கு சிறந்த செயல்திறன், கேமரா திறன் மற்றும் சவுண்ட் அனுபவத்தை வழங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஸ்மார்ட்போன்கள் மற்றும் AI முதல் சைபர் பாதுகாப்பு, அறிவியல் முன்னேற்றங்கள் வரை — சமீபத்திய தொழில்நுட்ப (Technology News in Tamil) அப்டேட்களை தொடர்ச்சியாக பெறுங்கள். டிஜிட்டல் டிரெண்ட்ஸ் குறித்து நிபுணர்களின் கருத்துகள், விரிவான தகவல்கள் மற்றும் பிரேக்கிங் நியூஸை வழங்கும் ஒரே தளம் ஏஷ்யாநெட் தமிழ் நியூஸ்.புதிய கேஜெட் ரிலீஸ் ஆனதா? புதிய ஸ்டார்ட்அப்புகள் வந்தவையா? எதிர்காலத்தை மாற்றக்கூடிய எந்த டெக் பாலிஸி வந்துள்ளது? இவை அனைத்திற்கும் சிறு சிறு தகவல்கள் இங்கு கிடைக்கும். டெக் விளக்கக் குறிப்புகள் மற்றும் கேஜெட் டெமோ வீடியோக்களையும் நீங்கள் பார்க்கலாம்.